அரசாங்கத்தை கவிழ்ப்போம் - அநுரகுமார
சைற்றம் விவகாரத்துக்கு தீர்வொன்றை வழங்காவிட்டால் அரசாங்கத்தில் உள்ள சிலரையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜே.வி.பி எச்சரித்துள்ளது.
சுகாதார அமைச்சுக்கு பேச்சு நடத்தச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் இரும்பு பொல்லுகளுடன் செல்லவில்லை. சைற்றம் மருத்துவ கல்லூரியை அரசு மூடாவிட்டால் தாம் இரும்பு பொல்லுகளுடன் வரவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் கூறினார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவல்களைக் கூறினார்.
சைற்றம் விவகாரம் அரசாங்கத்துக்குள்ளும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. இலவசக் கல்வியை பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் அரசாங்கத்துக்குள் இருக்கின்றனர். எதிர்க்கட்சியில் பல விடயங்களில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் சைற்றம் விவகாரத்தில் சகலரும் ஒன்றிணைந்துள்ளோம். அரசில் இருப்பவர்களையும் இணைத்து அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றார்.
பல்கலைக்கழக மாணவர்கள் நிராயுதபாணிகளாகவே சென்றனர். அவர்கள் இரும்பு பொல்லுகளுடன் சென்றிருக்கவில்லை. சைற்றம் மூடப்படாவிட்டால் இரும்பு பொல்லுகளுடன் நாம் வரவேண்டியிருக்கும்.
வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தோல்வியடைந்திருப்பதாக அரசாங்கம் கேலி செய்கிறது. இதனால் பணியாற்றும் வைத்தியர்களையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு அரசாங்கம் தூண்டுகிறது. பொறுப்பற்ற விதத்தில் அரசு செயற்படுகிறது என்றார்.
உங்க கருத்து வாஸ்தவம்தான் தான் தலைவரே ஆனா உங்க பேச்ச மட்டும்தான் கேக்குறாங்க ஓட்ட போடமாட்றாங்களே
ReplyDeleteஜேவிபிகாரங்களின் இந்த சைத்தெம்(SAITM) விவகாரம் ஏற்றுக்கொள்ள முடியாது அவர்கள் இந்த பிரச்சினைக்கு தழை போடாமல் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் நடுநிலை கையன்று இருக்கவேண்டும்.சாய்தேம் ஒரு தனியார் கல்வி நிலையம் அங்கே பணம் வசதியுள்ளவர்கள் சென்று படிக்கலாம் அது அவர்களின் நிலைமையை பொறுத்து.
ReplyDeleteஇலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ கல்வியை தொடர்கிறார்கள் அப்படியென்றால் ஏன் அதே கல்வியை நம்நாட்டில் தொடர முடியாது.எமது நாட்டில் இன்னும் எத்தனையோ தனியார் கல்வி பாடசாலைகள்,பொறியியல் நிலையங்கள்,தனியார் மருத்துவநிலையங்கள் இருக்கின்றன ஏன் அவைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் தடை செய்யுங்கள் சொல்லுவதில்லை?ஏன் என்றால் வஞ்சகம்,பொறாமை இன்னும் பேராசை போன்ற மனத்துவ காரணம்களினால் தான் தனியார் கல்வி நிலையத்துக்கு மட்டும் தங்களின் எதிர்ப்பு நடவடிக்கை மேட்கொள்ளறார்கள்.
Kavukka enna paanayaa?
ReplyDeleteMohideen Bawa,
ReplyDeleteHe is in a position to gather hundreds of thousands of people and rally against the government so that the government is atleast embarrassed in front of the international community and that the government does something to address the situation.
What position are you and your Muslim so called 'National' 'International' leaders in?
You are in a position to only make dumb comments or ask dumb questions like that and make fools of yourselves. You already know, you and your leaders can not move even a piece of hair- you need to learn that from Tamils.