நாட்டின் பிரதான பிரச்சினை, ஞானசார தேரரின் பிரச்சினை அல்ல - அஸ்கிரி பீடத்தின் உப பீடாதிபதி
அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்கிரி பீடத்தின் உப பீடாதிபதி வெடருவே உபாலி தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஆட்சியாளர்கள் கல்வி, கலாச்சாரம் ஆகியனவற்றை இல்லாமல் அழிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. எனவே அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து மாநாயக்க தேரர்களினால் மட்டுமே தீர்மானம் எடுக்கப்பட முடியும். இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
பண்டைய அரசர்கள் அரச திறைசேரியின் சொத்துக்களை மாநாயக்க தேரர்களுக்கு பூஜையிட்டனர். தற்போதைய ஆட்சியாளர்கள் பௌத்த உரிமைகளை கொள்ளையிட முயற்சிக்கின்றனர்.
தற்போதைய அரசாங்கம் அரச சொத்துக்களை மிகவும் இழிவான முறையில் கொள்ளையிட முயற்சிக்கின்றது.
நாட்டின் பிரதான பிரச்சினை ஞானசார தேரரின் பிரச்சினை அல்ல.
கலாச்சார, சமய மற்றும் தேசிய பிரச்சினைகள் பல எழுந்துள்ளன, இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்துவதற்கு பதிலாக அரசியல்வாதிகள் இன முரண்பாட்டை தூண்ட முயற்சிக்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னால் ஜனாதிபதி பிரேமதாசா போன்ற ஆட்சியாளர் இலங்கைக்கு தேவை...
ReplyDeleteஇலங்கையில் பண்டைய நாட்டு அரசர்கள் ஒருவரும் புத்த மதத்தை சார்ந்தவர்களாக இருக்கவில்லை தக்காலத்தில் அவர்கள் பற்றி பொய் பிரச்சாரம் செய்றார்கள் இந்த புத்த துறவிகள்,பண்டைய காலத்து அரசர்கள் அவர்களின் ஆட்சியை பற்றியும் எதிரிகளை எவ்வாறு எதிர்ப்பது பற்றியும் தான் மிகவும் குறிக்கோளாக இருந்தார்கள் சில அரசர்கள் தன்னுடைய சகோதர்களை அல்லது தந்தை பகைத்து கொன்றும் அவர்களை சிறைவசம்/கொலை செய்தும் தான் ஒரு குறிப்பிட்ட பிரேதசம்களை அன்றார்கள்.
ReplyDeleteவிஜயன் இலங்கைக்கு வந்து குவைனியை திருமணம் செய்தார் பிறகு குவைனியை விரட்டி விட்டு திரும்ப இந்தியாவுக்கு சென்று தமிழ் பெண்மணியை திருமணம் செய்து இலங்கை வந்தார் இப்படி எத்தனையோ வரலாறு இருக்கின்றன.பழைய வரலாற்று புத்தகங்கள் வாசித்து படிச்சால் தான் விளங்கும் இலங்கையின் நிலைமை எவ்வாறு இருந்தது என்று.
Pora polka paartha thirudan,mudichowki,pombulakkallan, kudikaaran,kolakaaran,kudukaaran ellarum seyra ellawelum senjuttu MANJALTHUNIY SUTHIKITTA sattathula irunthu thappikkalamdoooi.....iwanugalukkellam Nalla oru thunithaan intha manja thuni.yaarum waalatta mudiyazudooii..
ReplyDeleteStill looking for Ranjan Vijeratna and Udugampola to fix these problems creators
ReplyDelete