Header Ads



'பௌத்த பிக்குமார் தற்போது அதிகளவில், விமர்சனங்களுக்கு உள்ளாகின்றனர்' - மகிந்த

நாட்டின் நிலைமை குறித்து மக்கள் புரிந்துணர்வுடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் வரலாற்றில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்.

மேலும், தற்போது பௌத்த பிக்குமார் மற்றும் படையினர் அதிகளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும். என்பதற்காக எப்படியெல்லாம் புரட்டிப்புரட்டி அறிக்கைகளை வெளியிடுகிறார். ஆனால் ஒன்றுமே மக்களை ஈர்ப்பதாயில்லை. சாயம் வெழுத்த கதைதான். அனைவருமே அடையாள கண்டுகொண்டனர்.
    ஆட்சியை தருவதும் எடுப்பதும் அவன் செயலே.

    ReplyDelete
  2. ஐயா பெரியவரே! முஸ்லிம்கள் உங்களோடுதான் இருந்தார்கள். மாறாக நீங்கள் போட்ட தப்புக்கணக்கின் காரணமாக தோற்றீர்கள்.
    யுத்த வீரனான உங்களோடு சிங்கள மக்கள் 100 வீதம் இருப்பார்கள் என்பதும் தமிழர் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் அவசியமில்லை என்று நினைத்ததும் தப்புத்தான். யுத்தத்தில் அடிபட்ட தமிழர் வாக்குகள் கிடைக்காது என்ற நிலையில் முஸ்லிம்களின் வாக்குகள் அவசியம் என்பதைக் கணிக்காது சேனாக்களின் உருவாக்கம் அவற்றினால் ஏற்படுத்தப்பட்ட பாதகமான விளைவுகளின் போது பராமுகமாக இருந்துவிட்டு அல்லது தட்டிக்கழித்துவிட்டு அதனால் ஏற்பட்ட தோல்விச் சுமைகளை இறக்கிவைத்து வெற்றியைச் சுவைக்க வழிதேடி நேரத்திற்கு நேரம் மாறுபட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகிறீர்கள். அதில் ஒன்றுதான் இவ் அறிக்கையும்.
    உங்களது வெற்றிக்கான சில ஆலோசனைகள் : 1. சிங்கள மக்களின் வாக்குகள் உங்களுக்கு அதிகரிக்குமே தவிர குறையாது. எனவே மேலும் மேலும் சிங்களமக்களுக்காக மட்டும் அறிக்கை விடாதீர்கள்.
    2. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் யாரும் நீங்கள் தங்கத் தட்டில் தீர்வு வழங்கினாலும் உங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்பதை கருத்திற்கொள்க.
    2. நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து 2020 களில் வெளியேறுவதாயினும் முஸ்லிம்களின் வாக்குகள் அவசியம் என்பதை உணர்ந்து தவறுகளுக்காக பகிரங்க மன்னிப்புக்கோரி தொடர்ந்து நல்லெண்ணம் கொண்டு காரியமாற்றுங்கள்.
    4. தற்போதைய நிலையில் அரசில் இருக்கும் அதிருப்தியால் மாற்றுத்தளம் ஒன்றைத்தேடும் முஸ்லிம்களுக்கு அன்புக்கரம் நீட்டுங்கள்.
    5. கிழக்கில் தங்களுக்குச் சாதகமான மாற்றுத்தலமைகளைத் தேடி அணைத்துக்கொள்ளுங்கள். அடிக்கடி விகாரைக்குச் சென்றுவருவது போன்று கிழக்கிற்கும் சென்றுவாருங்கள்.
    இவ்வாறு இன்னும் பல..... இன்ஷாஅல்லாஹ் வெற்றி தேடிவரும்.

    ReplyDelete
    Replies
    1. @Lafir, நீங்கள் குலம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்கிறீர்கள்.

      நீங்கள் மீண்டும் தோற்கடிக்கவல்லா ஆலோசனை சொல்கிறீர்கள், பாவம்.

      Delete

Powered by Blogger.