Header Ads



மூதூர் சிறுமிகள் துஸ்பிரயோகம். உண்மை நிலை என்ன..?

கடந்த 2017.05.29ல் மூதூர் மல்லிகைத்தீவு பெருவெளிக் கிராமத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களுடன் பேச விரும்புகின்றோம். மேற்படி சிறுமிகள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தொடர்பில் பொலிசாரும் நீதிமன்றமும் நடாத்தி வரும் விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம்.

இவ்வாறு விசாரணையில் இருக்கும் மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்களும் அரசியல் தரப்பும் வெளியிட்டுவருகின்ற கருத்துக்கள் எமக்கு வேதனையை அளிப்பதோடு, இன நல்லுறவை சீர்குலைப்பதாகவும் இருக்கின்றன. அதாவது குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சந்தேக நபர்களை குறித்து கண்டனத்தை வெளியிடுவதற்குப் பதிலாக பேரணிகளும், ஊடகங்களும் அரசியல் தரப்பும் சந்தேக நபரின் இனத்தையும் மதத்தையும் இணைத்து இழிவுபடுத்தும் நோக்கோடு கருத்துக்களை வெளியிட்டவண்ணமுள்ளனர். இது குறித்த பிரச்சினையை சாட்டாக வைத்து இன்னுமோர் பாரிய பிரச்சினைக்கு அடித்தளமிடும் முனைப்பை தெளிவாக இனங்காட்டி நிற்கின்றது.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டது போன்ற தோற்றப்பாட்டை பல்வேறு ஆயுத இயக்கங்கள் மேற்கொண்டதை நாம் நன்கு அறிவோம். 28.05.2017 அன்று தோப்பூர் இக்பால் நகரில் உள்ள தமது காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்று பழிசுமத்தி, வீரமாநகர் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். உடனே இதனை ஊடகங்களும் அரசியல் வாதிகளும் தமிழ் மக்கள் மீதான முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு என பொய் செய்திகளைப் பரப்பினர். இறுதியில் காணிப் பகுதியினரின் விசாரணை முடிவில் அவை முஸ்லிம்களுக்குரிய பூர்வீக காணிகள் என உறுதிப்படுத்தப்பட்டது. இதே சமகாலப் பகுதியில் தோப்பூர் செல்வ நகர் காணிகள் விகாரைக்குரியது என்று அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் இவ்வாறான செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்களும் அரசியல் வாதிகளும் குறித்த பிரச்சினையை மதம் சார்ந்து இனம் சார்ந்து இனப்பிரச்சினைக்கு தூபம் போடும் விதமாக வெளியிட்டு வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
இரண்டு வருடங்களுக்கு முன்னார் சம்பூர் பாட்டாளிபுரத்தில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த சிறிவதனி 33 ஆசிரியையின் நகைகள் சூறையாடப்பட்டு, கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படாள். உடனே ஊடகங்கள் இனவாத கண்ணோட்டத்தில் இதனை செய்தியாக வெளியிட்டன. இறுதியில் 4 தமிழ் இளைஞர்கள் குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டனர். அவ்வாறே சேனையூரிலும் தர்சன் (06) என்ற சிறுவன் தன் அண்ணனால் கொல்லப்பட்டு கிணற்றில் போடப்பட்ட சம்பவங்களும் ஊடகங்களால் இதே விதமாகவே கையாளப்பட்டன.
இவ்வாறான செய்திகளை ஊடங்கள் பாரபட்சத்தோடு வெளியிடுவது ஊடக தர்மமாகாது புங்குடு தீவு வித்தியா பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட விடயத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கிறிஸ்தவ காடையர்கள் என்று கூறவில்லை. ஆசிரியை சிறிவதனியின் கொலையோடு தொடர்புடைய சுற்றவாளிகளை தமிழ் காடையர்கள் என்றோ இந்துக் காடையர்கள் என்றோ அவ்வூடங்கள் சுட்டவில்லை. ஆனால் முஸ்லிம்களை சந்தேகிக்கின்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் முந்திக்கொண்டு மேற்படி இனவாத ஊடங்களும் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டங்களும் இஸ்லாமிய காடையர்களின் செயல், சோனிகளின் காடைத்தனம், இஸ்லாமிய மாடு தின்னிகளின் கொடூரம், குர்அன் ஓதி நோன்பு பிடிப்பவர்களின் தீரச்செயல் என கீழ்த்தரமாக வக்கிர புத்தியுடன் செய்திகளை வெளியிட்டு, இன விரிசலுக்கு தூபமிட்டு முஸ்லிம்களை சீண்டிப்பார்க்கின்ற கைங்கரியத்தை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தான் மேற்படி பெருவெளி தமிழ் கலவன் பாடசாலை சிறுமிகளின் பாலியல் துன்புறுத்தல் விடயங்களையும் மேற்படி ஊடகங்கள் கையாண்டு பார்த்திருக்கின்றனர். இச்சிறுமிகள் கற்கும் பாடசாலையில் கட்டடவேலைகள் செய்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தி அடித்து துன்புறுத்தப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பிரகாரம் 2017.06.05ம் திகதி மூதூர் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் மேற்படி குற்றம் சுமத்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் ஆள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட வேளையிலே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட சிறுமிகள் மேற்படி இளைஞர்கள் எவரையும் அடையாளம் காட்டவில்லை என்பது நீதிமன்றத்தால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படியானால் 
1. உண்மையான குற்றவாளி யார்?
2. அக்குற்றவாளியை பாதுகாப்பவர்கள் யார்?
3. உண்மையான குற்றவாளி இதுவரை கைது செய்யப்பட்டாததன் மர்மம் என்ன?
4. குறு;றச்சாட்டு முஸ்லிம் இளைஞர்கள் மீது புனையப்பட்டதன் நோக்கம் என்ன?
5. ஊடகங்களும் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டங்களும் முந்திக்கொண்டு முஸ்லிம்களை சாடியதன் பின்னணியாது?

இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல்கள் முஸ்லிம் - தமிழ் உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதாகும். இதனை இரு தரப்பு மக்களும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகங்களும், அரசியல் சக்திகளும், சிவில் சமூக நிறுவனங்களும் கூடுதல் பொறுப்புணர்வுடனும், தார்மீக சிந்தையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதோடு, முரண்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும், உள்நாட்டு, வெளிநாட்டு தீய சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என இன நல்லுறவின் பேரில் கேட்டுக்கொள்கின்றோம்.

மூதூர் - தோப்பூர் இணைந்த சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் 
05.06.2017

3 comments:

  1. குற்றத்தை நீயாயப்படுத்தவே முஸ்லீம்கள் யாவரும் விரும்புகின்றனர்.
    பெய்யை திரும்ப சொல்லி உண்மை யாக்க முற்படுகின்றனர்.
    இங்கு பாருங்கள்
    "கடந்த காலங்களில் முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டது போன்ற தோற்றப்பாட்டை பல்வேறு ஆயுத இயக்கங்கள் மேற்கொண்டதை நாம் நன்கு அறிவோம்"
    இது தான் இந்த நூற்றாண்டின் மிகசிறந்த பொய்..

    ReplyDelete
    Replies
    1. Kumar, why don't you tell the truth then? We shouldn't expect justice from you too..

      Delete
    2. குற்றம் என்பதை நியாயப் படுத்துவது மிகப்பெரிய பிழை என்பதை எற்றுக் கொள்கிறேன்.
      ஆனால் இந்தக் குற்றத்துக்கு இஸ்லாமிய ஒட்டுமொத்த சமூகத்தையும் சீண்டும் விதமாக இந்துத்துவ வெறி பிடித்த ஊடகங்கள் நடந்து கொள்வதையே இவ்வாக்கம் சுட்டிக் காட்டுகிறது

      Delete

Powered by Blogger.