Header Ads



பருப்புக் கறிக்குள், விழுந்த குழந்தை

அடுப்பில் இருந்து இறக்கி வைக்கப்பட்டு, கொதி நிலையில் காணப்பட்ட பருப்புக்கறி சட்டிக்குள் விழுந்து, ஒன்பது மாதக் குழந்தை, எரிகாயங்களுக்கு உள்ளான சம்பவம், மாங்குளம் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குழந்தை, மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுலக்ஷன் அபிசாந் என்ற ஒன்பது மாதக்குழந்தையே இவ்வாறு எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குழந்தையை அருகில் இருத்தி விட்டு, தாயார் சமையில் வேலையில் கவனம் செலுத்தியுள்ளார். இதன்போது, அடுப்பில் சமைக்கப்பட்ட பருப்புக் கறியை கொதி நிலையில் இறக்கி கீழே வைத்துவிட்டு இதர வேலையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, தவறுதலாக குழந்தை பருப்புகறி சட்டிக்குள் விழுந்துள்ளது.

No comments

Powered by Blogger.