Header Ads



சுவிஸில் இலங்கை முஸ்லிம்களின், நல்லிணக்க இப்தார் - பௌத்த, கிறிஸ்த்தவ, இந்து மதகுருக்கள் பங்கேற்பு


பௌத்த, கிறிஸ்த்தவ, இந்து மதகுருக்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வு சுவிற்சர்லாந்து - சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள மஸ்ஜித்துல் ரவ்ளா இலங்கைப் பள்ளிவாசலில் 17.06.2017 அன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுவிஸில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களும், இலங்கைவாழ் முஸ்லிம்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈராக், பலஸ்தீன மக்களும் பங்கேற்றனர். 

இங்கு தமது கருத்துக்களை தெரிவித்த மதகுருமார்கள் இலங்கைக்கு மாத்திரம் நல்லிணக்கம் தேவைப்படவில்லையெனவும், முழு உலகமும் நல்லிணக்கத்திற்காக ஏங்கி நிற்பதாகவும் இதுபோன்ற இப்தர்கள் நிகழ்வுகள் அந்ந நல்லிணக்கத்திற்கு துணை நிற்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

மேலும் இதுபோன்ற இப்தார் நிகழ்வுகள் எதிர்காலங்களிலும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமெனவும், கடந்த காலங்களில் தமக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் காணப்பட்ட உறவுகளை சிலாகித்து கூறியதுடன், இப்தார் நிகழ்வுக்கு தம்மையும் அழைத்தமைக்காக சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இங்கு அப்துல்லாஹ் பாயிஸ் (ரசாத்தி) உரையும் நடைபெற்றது. அவர் இஸ்லாம் பற்றியும், அல்குர்ஆன் குறித்தும் தெளிவான விளக்கங்களை வழங்கினார். அவரது உரையை அடுத்து அல்குர்ஆனில் இவ்வளவு நல்ல விடயங்கள் சொல்லப்பட்டிருக்கா என்ற ஆச்சரியத்துடன் அல்குர்ஆனின் தமிழ் பிரதியொன்றையும் இந்து மதக்குரு  வாங்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.