பிரான்ஸில் பள்ளிவாசலுக்கு வெளியே, வாகனத்தால் மோதி தாக்குதல் நடத்த முயன்றவன் கைது
பிரான்ஸ், பாரிஸ் நகரிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியே மக்கள் கூட்டத்திற்குள் வாகனத்தை செலுத்தி தாக்குதல் முயற்சியில் ஈடுபட முயன்ற சந்தேகநபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று காலை க்ரீட்டல் புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பள்ளிவாசலுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த தடைகளால் குறித்த நபரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எந்த நோக்கத்திற்காக குறித்த நபர் இவ்வாறு முயற்சித்துள்ளார் என இது வரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் குறித்த நபர் ஆர்மேனிய இனத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் பாரிசில் இடம்பெற்ற இஸ்லாமியவாத-தொடர்புடைய தாக்குதல்களுக்கு பழிவாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்திவெளியிட்டுள்ளன.
குறித்த நபரின் கார் பள்ளிவாசலை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் மீது தொடர்ச்சியாக மோதித் தாக்கியதாகவும் அதன் பிறகு அங்கிருந்து அந்தக் கார் வேகமாக சென்றதுடன் மீண்டும் தடுப்புகளில் மோதியது நிலையில் காரிலிருந்து சந்தேக நபர் தப்பியோடும் போது கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment