''ஜனாதிபதியை விடவும் அமைச்சர்கள், பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள்''
ஜனாதிபதியை விடவும் அமைச்சர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றார்கள் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை ஏதேச்சாதிகார போக்கில் அமைச்சர் ஒருவருக்கு கைப்பற்றிக் கொள்ள முடியுமாயின் ஜனாதிபதிப் பதவியின் பயன் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
புஞ்சி பொரளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமைச்சர்கள், அரச நிறுவனங்கள் தொடர்பான துறைகளை நிர்ணயம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது எனினும், ஜனாதிபதியையும் மீறி அமைச்சர்கள் சில நிறுவனங்களை கைப்பற்றிக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிதி அமைச்சின் கீழ் இயங்கி வந்த லொத்தர் சபைகள் எந்த அடிப்படையில் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment