Header Ads



யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு, போட்டுக் குளிக்க வேண்டும்..!

முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திப்பதற்காக இருந்த 'முஷார்' பிரிவைச் சேர்ந்த தலித் மக்களை அதிகாரிகள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். 

உத்தரப் பிரதேசத்தில் 'முஷார்' என்ற தலித் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முஷார் இன மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக,  நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகள் அந்த மக்களிடம் சோப்பு, ஷாம்புகளை கொடுத்து அவர்களை குளித்து வர சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

மேலும் முதல்வர் யோகி, அந்த மக்களை சந்திக்கும் பகுதியில் புதிதாக தெரு விளக்கு, சாலை, கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில், உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க யோகி செல்ல உள்ளார் என்பதற்காக, ராணுவ வீரரின் வீட்டிற்கு ஏ.சி, புதிய இருக்கைகள், தரை விரிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் யோகி சென்றவுடன் அது அனைத்தையும் அதிகாரிகள் திரும்ப எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. Hehehee.... மதவாதிகளின் மனிதாபிமானம்!! வெட்கக்கேடு!

    ReplyDelete

Powered by Blogger.