புத்தளம் வாழ் உறவுகளுக்கு, சம்பிக்கவின் சவால்..!
நாட்டின் குப்பை பிரச்சினைகளை தீர்க்க புத்தளம் சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிகளை பயன்படுத்த புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குப்பை பிரச்சினைகளை தீர்க்க இதுவே சிறந்த வழிமுறை என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இந்த முயற்சிகளை எவரும் தடுக்க முனைந்தால் அவர்களே குப்பை பிரச்சினைக்கு பொறுப்பு கூறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாரிய நகர மற்றும் மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் பாறைகள் அகழ்வுகள் மேற்கொண்ட பகுதிகளில் குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என சிலர் கேள்வி எழுப்பியுள்ளதுடன் சூழல் பாதிக்காத வகையில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
நாம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அவ்வாறன செயற்பாடுகள் அனைத்தையும் நாம் முன்னெடுக்க முன்னர் எமக்கு எதிராக பாரிய எதிர்ப்புகள் எழுந்தன. றை அவ்வாறான பாறைகள் அகற்றும் பிரதேசங்கள் உள்ளன. ஆனால் எதிலும் குப்பைகளை கொட்டுவதற்கு மக்கள் இடமளிக்க வில்லை. மக்களை தூண்டிவிட்டு ஒருசிலர் இந்த நடவடிக்கைகளை நிறுத்திவிட்டனர்.
அதேபோல் புத்தளத்தில் சீமெந்து உற்பத்தி சாலை அமைந்துள்ள பகுதியில் குப்பைகளை கொட்டவும் யோசனைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டு இந்த முயற்சிகளை நாம் எடுத்தோம். ஆனால் அப்போது பயங்கரவாத சிக்கல் இருந்தது. அதன் பின்னர் இது கைவிடப் பட்டது.
இப்போதும் புத்தத்தில் சீமெந்து உற்பத்தி சாலைக்காக பாறைகள் உடைக்கப்பட்ட இடங்களில் பாரிய குழிகள் உள்ளன அவற்றை நாம் பயன்படுத்த முடியும். ஒரு வருடத்தில் 14 லட்சம் டொன் கற்கள் அகற்றப்படுகின்றன. இதில் பாரிய இடம் உள்ளது. ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் கிலோ குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. ஆகவே இந்த குழிகளை பயன்படுத்த முடியும். குழிகளில் குப்பைகளை கொட்டி காடுகளை வளர்க்க முடியும். மக்களை இந்த பகுதிகளில் குடியமர்த்த முடியாது. இதுவே சிறந்த தீர்வாகும். இதற்கு உலக வங்கியின் நிதி உதவிகளும் எமக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை முன்னெடுக்கப்படவில்லை. இதனை இந்த அரசாங்கம் முன்னெடுக்க முயற்சிக்கின்றது. எனினும் சூழல் பாதுகாப்பு அறிக்கை வரும் வரையில் நாம் காத்திருந்தோம். இப்போது நாம் இதனை முன்னெடுக்க முடியும்.
நாம் முயற்சிகளை கைவிடவில்லை. சூழலியல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னேடுத்து வருகின்றோம். அதற்கான சகல முன்னெடுப்புகளும் முடிவடைந்துள்ளன. அடுத்த மாதம் அறிக்கை கிடைத்தவுடன் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். குப்பைகளை சர்வதேச நாடுகளுக்கு அனுப்பி தீர்வு காண முடியாது. இங்கேயே தீர்வு காணவேண்டும். செப்டெம்பர் மாதம் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். நாட்டில் குப்பைகளினால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை மேலும் விரிவடைய அனுமதிக்கக் கூடாது. தீர்வுகானவேண்டும் . இதனை யாரும் குழப்பக்கூடாது. இது கொரியா நாட்டின் இயந்திர மற்றும் தொழிநுட்ப உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றது.
நாம் யாருடனும் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. இவற்றை குழப்ப யாரும் முயற்சித்தால் அவர்கள் தான் இந்த பிரச்சினைக்கு பொறுப்பாகும். நாம் புத்தளம் பகுதியை ஒரு தேசிய வளம் மிக்க வலயமாக மாற்றவே முயற்சிக்கின்றோம். இதனை வெறுமனே குப்பைகளை மாத்திரம் கொட்டும் பகுதியாக கருததாது தேசிய சொத்தாக கருத்துகின்றோம். இதில் குப்பை மீள் சுழற்சி முறைமைகளை உருவாக்கவுள்ளோம். யாரும் இதை குழப்ப நினைத்தால் கைவிடவும் தயாராக உள்ளோம். இது எமது கடமை அல்ல. நாம் ஒரு உதவியாக இதை மேற்கொள்ளவுளோம். குழப்பங்களை மேற்கொண்டு இவற்றை தடுத்து நாட்டில் சூழலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடாது. இது மிகச்சரியான திட்டமாகும் என்றார்.
இந்த குப்பை விவகாரணம் அந்த சம்பிக்க செய்றான் என்பதற்கு நாங்கள் எதிர்க்க கூடாது நானும் புதிய குப்பை திட்டம் பற்றி அறிந்தேன் அது நவீன தொழிற்நுபத்தின் மூலம் உருவாக்கப்படுத்துறது.முழு தொழில்நுட்பத்தை தென் கொரியா உதவியுடன் அமுலாக்கப்படுத்தப்படுகின்றன அது தரேன் மிக்கமானதும் இயக்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏட்படுத்தது மேலும் இந்த திட்டம் மூலம் புத்தளம் நகரசபை நல்ல வருமானம் பெரும் அத்தோடு அதிகளவினமான தொழிவாய்ப்புகளையும் அந்த மக்கள் பெறுவார்கள்.
ReplyDeleteரிசாட் 98ஆவது முறையாக பதவிதுறப்பார்.சம்பிக்க திட்டத்தை கைவிடவேண்டும்.ஆட்சி கவிட்க்கப்படும்.
ReplyDeleteVery soon Tamil racist wicky will be overthrown by Indian Raw elements and Ranil.
Deleteகுமாருக்கு என்ன கோபமோ ரிசாட்டுடன்?
ReplyDeleteHaha... Mohamed Rafeek Abdul Kader, I spilled tea on my left hand sleeve trying to protect the computer.
ReplyDelete