இனவாதிகளை பாதுகாக்கிறார் ஜனாதிபதி - விக்ரமபாகு கடும் தாக்கு
-எம்.ஆர்.எம்.வஸீம்-
நாட்டில் இன,மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமர் தெரிவித்திருக்கின்றபோதும் இதுதொடர்பாக ஜனாதிபதியின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக இல்லை.
அவர் இனவாதத்தை பரப்புபவர்களை பாதுகாத்து வருகின்றார் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
பொதுபலசேனா அமைப்பைச்சேர்ந்த ஞானசாரதேரர் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அதனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தோம். அத்துடன் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்து அவரை கைதுசெய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஆனால் தற்போது இனவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். இந்த காலப்பகுதியில் 347 கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளதாக எங்லிகன் பிஷப் மேற்றிராணியார் எங்களிடம் தெரிவித்திருந்தார். பாரிய தாக்குதல்கள் அல்லாவிட்டாலும் திட்டமிட்ட முறையில் நாடுபூராகவும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறான சம்பவங்கள் மூலம் நாட்டின் எதிர்காலத்துக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
அத்துடன் இன,மதவாத நடவடிக்கைகளை தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
என்றாலும் இனவாத செயற்பாடுகளை தடுப்பதற்கு ஜனாதிபதியின் நடவடிக்கை எங்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை. இனவாதம் தொடர்பான அவரின் எண்ணம் வளைந்து செல்வதுபோல் இருக்கின்றது. இனவாதம், மதவாதத்தை பரப்பவேண்டாம் என அவர் தெரிவிக்கின்ற நிலையில், இன,மதவாதத்தை பரப்புபவர்களை பாதுகாத்து வருகின்றார். இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது அதனை தடுத்து வருகின்றார்.
அத்துடன் இனவாத்தை பரப்புபவர்களுக்கு அரசியல் பதவிகளை வழங்குகிறார்.மொனராகலை பிரதேசத்தில் இன,மதவாதத்தை துண்டக்கூடிய ஒருவருக்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசங்களில் இனவாத சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு அவர் அனுமதித்து வருகின்றார்.
அந்த பிரதேசத்தைச்சேர்ந்த வட்டரக்க விஜித்த தேரருக்கும் அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதியின் அனுமதியுடனா இவை நடைபெறுகின்றன என்பதை அறிந்துகொள்ள ஜனாதிபதியை சந்திக்க வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நாட்டில் இனவாதம் மதவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து வரும் ஜனாதிபதி இனவாதத்தை தூண்டுபவர்களை பாதுகாத்து வருவதை அனுமதிக்க முடியாது.
அத்துடன் ஜனாதிபதி தனது கட்சியை பாதுகாப்பதற்காக இனவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது என்றார்.
ஜனாதிபதியும் பொலிஸ் மா அதிபரும் உடனடியாக பதவி விலக வேண்டும்.ஒரு நாட்டை ஆளும் சக்தி தலைவருக்கு இல்லாவிட்டால் ஏன் அவர் தொடர்ந்து அந்த பதவியில் இருக்க வேண்டும்.
ReplyDeleteஜனாதிபதி ஒருவகையில் ஏதோ மனநோயாளி போல தென்படுகின்றன யாரு சரி அவருக்கு காய் கொடுத்தால் வேற என்னமோ யோசித்துக்கிட்டு இருக்கிறார், சில நேரம் கண்டும் காணாமல் போல இருக்கிறார் ஒழுங்கா முகம் பார்த்து வெளிநாட்டு தூதுவர்களை பேசுவதில்லை,சிறுபான்மை மக்களின் பிரச்சினை ஒன்றும் தெரியாதாம் சில நேரம் பத்திரிகை மூலமாக மட்டுமாம் விஷயம் தனக்கு தெரியுமாம் அப்படியான ஜனாதிபதி இனிமேல் நாட்டுக்கு தேவையில்லை.
ஞானசார கைது செய்யப்பட்டாலும் சிங்களமக்கள் கர்தால் செய்து அவரை மீட்டெடுக்க முடியும்.முஸ்லீம்களின் நீயாயப்படி! !😄
DeleteNAMMA NAATLA PADAVI RAAJINAAMA??
ReplyDeleteSUMMA PONGA BROTHER
IVANGA PADAVIKKAHA INDA NAATAYE WIPPAANUNGA.
Majority Muslims are UNP voters and the party is
ReplyDeleteduty bound to protect its vote bank.UNP can not
wash off its hands by passing the ball to Muslim
parties. All these stinking political leaders of
major parties are doing politics with an issue
so dangerous the moment Muslims feel " we had it
enough." Almost all Buddhist leaders are playing
in favour of racist acts of criminal thugs who
have borrowed the helmet of Buddhism. The leaders
who are able to wait for a bigger picture know
very well the consequence. THE BALL IS ALREADY IN
MUSLIM'S COURT.RANIL AND MY3 ARE DOING UMPIRES .
MUSLIMS MUST DECIDE TO PLAY OR LEAVE THE COURT .
A BALL IS SERVED TO BE RETURNED AND NOT TO KEEP
LOOKING AT .