ஞானசாராவை பொலிஸாரே காப்பாற்றினர் - சாடுகிறது ராவய பத்திரிகை
தமிழில் ARM INAS-
ஞானசார தேரருக்கு பிணை கிடைக்ககூடிய வகையில் ஞானசார தேரர் செய்த குற்றத்துக்கான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் அக்குற்றத்துடன் சம்பந்தப்படாத பிணை பெற்றுக்கொள்ளும் வகையிலான சம்பந்தமே இல்லாத சட்டத்தின் கீழ் பொலிஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்பித்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 21 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் மற்றும் 3 இலக்க நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு முன்னிலையில் பொலிஸாரால் சமர்பிக்கப்ட்ட பீ அறிக்கை மூலம் ஞானசாரா தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே பொலிஸார் வேண்டுமென்றே இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட குற்றங்களை தடுப்பதற்கான பொலிஸ பிரிவால் நீதிமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்ட பீ அறிக்கையின் படி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர்ரஹ்மான் பொலிஸில் செய்த முறைப்பாடே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர்ரஹ்மானின் முறைப்பாடு தொடர்பில் பீ அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
2017.05.16 அன்று முஜீபுர்ரஹ்மான் அவர்களால் பொலிஸில் ஞானசார தேரருக்கு எதிராக எழுத்து மூலமான முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அவர்களால் 13.05.2017 அன்று பொலன்னறுவையில் சின்னவெலபெட்டி கிராமத்தில் அல்லது வெஹெரகொடெல்ல பிரதேசத்தில் ஊடக மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது.
அதில் ஞானசார தேரர் அவர்கள் முஸ்லிம் மக்களுக்கும், இஸ்லாம் மார்க்கத்துக்கும், அல்லாஹ்வுக்கும் இழிவு கற்பிக்கும் வகையில் உரை நிகழ்த்தியுள்ளர். அதனால் இந்நாட்டின் சகவாழ்வுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த உரை இணையத்தினூடாக இலங்கை முழுதும் பரவியுள்ளதாகவும் இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலை உருவாகியுள்ளதாகவும் அவரின் முறைப்பாட்டுக் கடிதத்தில் பதியப்பட்டுள்ளதாகவும்
இது இலங்கை குற்றவியல் சட்டத்தின் படி 291அ ஷரத்து, 291ஆ ஷரத்துகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என பொலிஸார் சமர்பித்த பீ அறிக்கையில் பதியப்பட்டிருந்தது.
பீ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்தின் தன்மையை அடிப்படையாக கொண்டு ஞானசார தேரருக்கு எதிராக இரண்டு சட்டப் பிரிவின் கீழ் பொலிஸாரால் வழக்கு பதிவு செய்திருக்க முடியும்.
அதில் ஒன்று 2007 56ஆம் இலக்க (ICCPR) சட்டத்தின் கீழ். இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் குற்றவாளியால் பிணை பெற்றுக்கொள்ள முடியாது. பிணை வேண்டுமானால் விசேட சந்தர்ப்பங்களில் மாத்திரமே பிணை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 10 வருட சிறை தண்டனை கிடைக்கும்.
அடுத்த சட்டம் , 291ஆ இது சாதாரண நீதிமன்றம் விசாரிக்கும் நீதிபதியால் எந்த நிபந்தனைகளுமின்றி குற்றவாளிக்கு பிணை வழங்கவும் முடியும். குற்றம் நீரூபிக்கப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு வருட சிறை தண்டனை வழங்கப்படும்.
சாதாரணமாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் இரண்டு சட்டத்தின் கீழும் பொலிஸாரால் குற்றவாளிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும். பொலிஸார் அப்படி செய்திருந்தால் அத்தினம் ஞானசார தேரருக்கு பிணை கிடைத்திருக்காது. ஆகவே தான் பொலிஸார் வேண்டுமென்றே ஞானசார தேரரை காப்பாற்றும் நோக்கில் அவருக்கு பிணை பெற்றுக்கொடுக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளார்கள் என்று தெளிவாகிறது.
கொழும்பு 3 ஆம் இலக்க நீதிமன்றத்தில் சமர்பிக்ப்பட்ட பீ அறிக்கையில் முதலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், நீதி மற்றும் சமாதானத்துக்கான அமைச்சர் சாகல ரத்நாயக அவர்களுக்கு எதிராகவும் வசைபாடியதற்கு மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு ஊறுவிளைவித்தது தொடர்பிலாகும்.
முதலில் பொலிஸாரால் (ICCPR) சட்டத்தின் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக குற்றவறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது. எனினும் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்னைய நாள் (20ஆம் திகதி) (ICCPR) க்கு கீழால் இருந்த முறைப்பாட்டை சாதாரண சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை சமர்பிப்பதாக பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்து குற்றப்பத்திரிகையில் மாற்றம் செய்தது.
அதற்கு அடுத்த நாள் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணையின் போது ஞானசார தேரருக்கு பிணை வழங்குவது தொடர்பில் பொலிஸாரால் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
இச்சந்தர்ப்பத்தில் நீதிபதி
ஏன் இந்த வழக்கில் மாத்திரம் நீங்கள் விசேட நடைமுறைகளை மேற்கொள்கிறீர்கள் என பொலிஸாரிடம் வினவினார். ஒரு சாதாரண மனிதன் திருடினால் அவன் வீட்டின் பக்கத்தால் சென்றால் கூட அவனை கைது செய்து பிணைகள் சட்டம் 14 கீழ் நீதிமன்றத்துக்கு சமர்பிக்கும் பொலிஸார் இந்த வழக்கில் மட்டும் ஏன் வித்தியாசமான போக்கை கடைபிடிக்கிறீர்கள் என நீதிபதி பொலிஸாரை கேள்வி கேட்டார்.
முன்னைய பீ அறிக்கையில் மிகப் பாரதூரமான குற்றமிழைத்ததாக பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரிவித்த போதும். இன்றைய தினம் பிணை வழங்குவதற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவிக்காததாலும் சந்தேக நபருக்கு பிணை வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.
இதனால் தெரியவருவதாவது ஞானசார தேரருக்கு பிணை வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென்ற நோக்கில் பொலிஸார் திட்டமிட்டு செயற்பட்டுள்ளனர்.
Post a Comment