ஜப்பான் பொலிஸார் மீது, இலங்கையர்கள் தாக்குதல்
ரோக்கியோவில் சிறிலங்கா தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் ஜப்பானிய காவல்துறையினர் சிலர் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாரஇறுதியில் சிறிலங்கா தூதரகத்தின் ஏற்பாட்டில், யொயோகி பூங்காவில் சிறிலங்கா திருவிழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்விலேயே ஜப்பானிய காவல்துறையினர் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
இலங்கையர்கள் சிலரே இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜப்பானிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மோதலில் ஈடுபட்டவர்கள் மது போதையில் இருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதரகத்திடம் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியிருந்த போதிலும் அதற்கான பதில் அளிக்கப்படவில்லை.
எனினும் இந்தச் சம்பவம் தொடர்பாக, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு, சிறிலங்கா தூதரகத்திடம் பிரச்சினை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment