தண்ணீரை இனி, மென்று தின்னலாம்..!
வீட்டை விட்டுக் கிளம்பும்போது வாட்டர் பாட்டிலை எல்லாம் இனி சுமந்து செல்ல வேண்டியதில்லை. ரெண்டு வாட்டர் ஜெல்லிகளைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போனால் போதும். ஆமாம்... லண்டனில் உள்ள ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் என்ற நிறுவனம் ஜெல் வடிவத்தில் தண்ணீரை தயாரித்திருக்கிறது.உபயோகப்படுத்திவிட்டுத் தூக்கியெறியப்படும் வாட்டர் பாட்டில்கள், பாக்கெட்டுகள் சுற்றுச்சூழலைக் கெடுப்பதால் அதற்கு மாற்றாகவே இப்படி ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். பழங்களின் சவ்வுப்பகுதிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜெல் வாட்டருக்கு ஓஹோ (Ooho) என்று பெயரும் வைத்திருக்கிறார்கள்.
ஒரு பந்துபோன்ற பனிக்கட்டியை எடுத்து, அதில் கால்சியம் குளோரைடு மற்றும் சோடியம் அல்கினேட் எனப்படும் கடற்பாசி வகையிலிருந்து எடுக்கப்பட்ட சவ்வுகளின் அடுக்குகளில் மூழ்கச்செய்வதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இரண்டு அடுக்குகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்த க்யூப்களின் மேல் அடுக்கை பிரித்துவிட்டு உள்ளிருக்கும் தண்ணீரைஅப்படியே விழுங்கலாம்.‘புற்றுநோய் வரை பல்வேறு நோய் அபாயம் கொண்ட பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் தண்ணீர் குடிப்பதைவிட இது மேலானது, விலையும் மலிவானது’ என்று கூறியிருக்கிறது ஸ்கிப்பிங் ராக்ஸ் நிறுவனம்.வர்லாம்... வர்லாம்... வா!
கெமிகல் இல்லமல் முடியது
ReplyDelete