மரணத்தை விற்பனை செய்யாதீர்கள்..!
ரயில் பாதையில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தவறான விடயங்கள் பரப்பப்பட்டு வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேராதனை பல்கலைக்கழக மாணவி ஒருவர் ரயில் பாதையில் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தொடர்பில் போலி தகவல்கள் வெளியிடுவதனால் நண்பர்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தனது நண்பி தவறான முறையில் விமர்சிக்கப்படுவது தொடர்பில் பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
“தரணி அல்லது BPK. அப்படி தான் நாம் அவரை அழைப்போம். அவர் எந்த நேரமும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஒரு பெண். இன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் ஒருவராக மாறியுள்ளார்.
அவரது மரணத்தை பலர் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார்கள். பலர் அவர் தற்கொலை செய்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்கள். பல பேஸ்புக் பக்கங்களில் அவரது மரணத்திற்கு கதை ஒன்றை உருவாக்கி விமர்சித்து வருகின்றனர்.
இவற்றில் பல கதைகள் பிழையானவை. தரணியை உண்மையாக நேசிப்பவர்களுக்கு, அவரது மரணத்தினால் வருத்தத்தில் உள்ளவர்களுக்கு இவ்வாறான விடயங்கள் மேலும் வருத்தமளிக்கின்றது.
உண்மையாக சிலர் வெளியிட்டுள்ள பின்னூட்டங்களை பார்ப்பதற்கு அசிங்கமாக உள்ளது. அவர்களில் பலர் குறைந்த பட்சம் அவரை பார்த்ததில்லை, பேசியதில்லை எனினும் மரணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஒரு தவறான தீர்மானத்தினால் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. எனினும் ஒரு தவறினால் அவர் இதுவரை அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு செய்த நல்ல விடயங்களை மறந்துவிட முடியாது.
அவரது தற்கொலை புகைப்படங்கள் பகிர்வதனை தவிர்த்து கொள்ளுமாறு அனைவரிடம் தயவாக கேட்டு கொள்கின்றேன். அவற்றில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? அவதானம் குறித்து காட்டுவதற்கு முயற்சிக்கின்றீர்கள்? உண்மையாக நல்ல மனது இருந்தால் அந்த அப்பாவி சிரிப்புடனான அழகான புகைப்படங்களை பகிருங்கள்.
தரணி முட்டாள் பெண் அல்ல, அவர் பல்கலைக்கழத்திற்கு வரும் அளவிற்கு திறமையானவர், விசேட பட்டதாரி பட்டம் ஒன்றையும் வெற்றிகரமாக அவர் பெற்று கொண்டார்.
எனினும் ஒரு வருத்தமான விடயம் அவரது வாழ்க்கையை அழித்து விட்டது. எங்களிடம் இருந்து அவரை தூரப்படுத்தியது. அவரை விமர்சிப்பதற்கு முன்னர், உங்கள் வாழ்க்கையில் எத்தனை முறை உடைந்து போனீர்கள் என்ற விடயத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
எனினும் நீங்கள் அதனை தாங்கி கொண்டு வாழ்வதனாலேயே இந்த பதிவை வாசிக்கின்றீர்கள். எனினும் தரணியினால் அவரை கட்டுப்படுத்தி கொள்ள முடியவில்லை. நாம் அனைவரும் மனிதர்கள். நாங்களும் தவறு செய்கின்றோம்.
சில விடயங்கள் பெரிய பிரச்சினையாகி விட்டால் அதனால் துன்பங்களை அனுபவிக்கின்றோம். இறுதியாக தரணி பட்டம் பெற்ற தினத்தன்று, பட்டம் பெறுவதற்கு முன்னர் தனது சந்தர்ப்பத்திற்காக சிரித்த முகத்துடன் காத்திருந்த புகைப்படத்தை பதிவிடுகின்றேன்... என குறிப்பிட்டு அவர் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
Post a Comment