Header Ads



கோயில் கட்டிய முஸ்லிம்கள், நோன்பு திறக்க அழைத்த இந்துக்கள்


கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் வசித்துவருகிறார்கள். இந்த மாவட்டத்திலிருந்து லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்குச் சென்று பணிபுரிகின்றனர்.

மலப்புரம் அருகே உள்ள புன்னதாலா என்கிற கிராமத்தில் மசூதிகளுக்கு மத்தியில் சிறிய இந்து கோயில் ஒன்று இருந்தது. 100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில், நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலிக்கிறார் விஷ்ணு பகவான்.

புன்னதாலா கிராமத்தில் வசிக்கும் இந்து மக்களுக்கு, இந்தக் கோயில்தான் ஒரே வழிபாட்டுத்தலம். கோயிலோ இடிந்து தகர்ந்துபோய் கிடந்தது. அதைச் சீரமைத்துக் கட்டவேண்டும் என்பது புன்னதாலா வாழ் இந்து மக்களின் ஆசை. அவர்களிடத்திலோ, நிதி இல்லை. நிதி திரட்ட முயன்றும் முடியாமல்போனதால், கோயில் சீரமைப்புப் பணி பல ஆண்டுகளாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்து மக்களின் ஆசையையும் இயலாமையையும் அறிந்த புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், உதவிக்கு ஓடி வந்தனர்.

'உங்கள் கோயிலை நாங்கள் கட்டித்தருகிறோம்' எனக் கூறி நிதி வசூலிக்கத் தொடங்கினர். சுமார் 20 லட்சம் ரூபாய் திரண்டது. புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், இந்து கோயிலைச் சீரமைக்க நிதியை அள்ளி வழங்கினர்.

இந்துக்கள் கண்களிலோ ஆனந்தக்கண்ணீர்!
திரண்ட நிதியை கோயில் கமிட்டியிடம் அளித்து, நரசிம்மமூர்த்தி ஆலயத்தைக் கட்டுமாறு இஸ்லாமியர்கள் கேட்டுக்கொண்டனர். கோயில் முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டது. நிதி திரட்டிக் கொடுத்ததோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக இஸ்லாமிய மக்கள் ஒதுங்கிவிடவில்லை. கோயிலின் சீரமைப்புப் பணிகளிலும் உடல் உழைப்பை நல்கினர்.

நெகிழ்ந்துபோன புன்னதாலா இந்து மக்கள், நன்றிக்கடனாக இஸ்லாமிய மக்களுக்கு கைம்மாறு செய்ய முடிவுசெய்திருந்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ரம்ஜான் நோன்பும் வந்தது. புன்னதாலா வாழ் இந்து மக்கள், இஸ்லாமிய மக்களுக்கு கோயில் வளாகத்தில் இஃப்தார் விருந்து வழங்க முடிவுசெய்து, அழைப்புவிடுத்தனர்.

அத்தனை இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, கோயில் கமிட்டி சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டது.

நரசிம்மமூர்த்தி ஆலய வளாகத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு விருந்து வழங்கப்பட்டது. இதில், 400 இஸ்லாமிய மக்களும் உள்ளூர் கிராம மக்களும் மகிழ்வுடன் பங்கேற்றனர். பரிமாறப்பட்ட சைவ உணவை இஸ்லாமிய மக்கள் ருசித்தனர்.

கோயில் செயலாளர் மோகனன் கூறுகையில்,

''எங்கள் கிராமத்தில் இந்து-இஸ்லாமிய மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்துவருகிறோம். நல்லது கெட்டது எதுவென்றாலும் இஸ்லாமிய மக்களுடன் கலந்து பேசி முடிவுசெய்வோம். இந்தக் கோயிலைக் கட்ட, சுமார் 20 லட்சம் ரூபாய் இஸ்லாமிய மக்கள் தந்தனர். யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அது அவர்களின் உரிமை. எல்லாவற்றையும் தாண்டி 'மனிதம்' என்ற ஒற்றை வரியில் நாங்கள் இணைந்து நிற்கிறோம்'' என்றார்.

மனிதநேயத்தை மிஞ்சியது எதுவுமேயில்லை, இறைவன் படைத்த உயிரை பலிகொடுத்து எந்த கடவுளையும் திருப்தி படுத்த முடியாது, மனித பிறவி மேன்மையானது அதை அனைவரும் போற்றுவோம

http://www.hindustantimes.com/india-news/kerala-temple-organises-iftar-party-for-fasting-muslims/story-NXhBU5awNkZLHUJ7MLWB3K.html

சுவனப் பிரியன்



10 comments:

  1. Dear Author, please consider of removing this article. avoid publishing articles like this.

    ReplyDelete
  2. அல்லாஹ்வுக்கு இணைவைக்க நிதியுதவி !? ..

    அப்படி என்றால் அவர்கள் இணைவைக்கும் பாவத்தி்ன் அதே பங்கு நிதியுதவி செய்த இவர்களுக்கு நிச்சயம் பதிவு செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது

    அல்லாஹ்வின் அல் குர்ஆன் செய்தி
    ☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞

    எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். (4:85)

    Sura An-Nisaa (51 - 100)

    ReplyDelete
  3. Please disregard my previous comment. Sorry for inconvenience caused.

    ReplyDelete
  4. நல்லது செய்தாலும் பல கேவலமான Comments, இதனைப்படிக்கும் மாற்று மதத்தினர்களுக்கு இஸ்லாம் பற்றிய நல்லென்னம் எப்படி வரும்? அடிப்படைவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.அடிப்படைவாதத்தால் இஸ்லாம் வளரப்போவதில்லை.

    ReplyDelete
  5. Lareef Abdul Majeed போன்ற நல்லவர்களால் இஸ்லாம் பற்றி நல்லெண்ணம் ஏற்படுகிறது.

    ReplyDelete
  6. தெளிவான ஷிர்க்

    ReplyDelete
  7. தெளிவான ஷிர்க்

    ReplyDelete
  8. Lareef Abdul Majeed ...

    மாற்று மதத்தவர்கள் உங்களை பார்த்து தான் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும் என்று அல்லாஹ் அல் குர்ஆன் இல் சொல்லவில்லை

    அவர்களும் அல் குர்ஆன் ஜ பார்த்து இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் அதை நீங்கள் அவர்களுக்கு சொல்ல வேண்டும் அவ்வளவு தான்

    இதன் அடிப்படையில் தான் இஸ்லாமிய மார்க்கம் மீது அந்த மக்களுக்கு தெளிவான உண்மையான நல்லெண்ணம் உண்டாகிறது

    இப்படி அல்லாஹ்வுக்கு இணைவைக்க உதவி செய்வதால் இஸ்லாமிய மக்கள் மீது நன்றி உணர்வு மட்டுமே அவர்களுக்கு சில நேரம் இருக்கும்

    இதன் எதிர் விளைவாக இஸ்லாமிய மார்க்கம் மீது அவர்களுக்கு தவறான எண்ணம் உண்டாக நிறைய வாய்ப்பு இருக்கிறது

    உதாரணமாக

    இந்த உதவி காரணமாக அவர்களின் இணைவைக்கும் வணக்கத்தை இஸ்லாமிய மக்கள் விரும்பிய காரணம் தான் அவர்கள் இதற்கு உதவி செய்து உள்ளனர் ஆகவே அவர்களின் இணைவைக்கும் வணக்கங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை விட சிறந்தது என்ற எண்ணத்தில் மேலும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரியத்தை அவர்கள் பலமாக செய்யும் நிலையில் அவர்களின் நிலை நிச்சயமாக மாறும்

    ReplyDelete
  9. Lareef மார்க்கம் தெரியாவிட்டால் அதைப்பற்றி படிப்பது அல்லது படித்தவர்கள் கூறினால் அதை ஏற்றுக்கொள்வது நல்லது.
    இஸ்லாமியர்களுடன் நல்லென்னம் வரவேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அனைவைக்கு உதவுமாறு ஏவ்வில்லை.
    கொஞ்சம் சூரா காபிரூன் அருளப்பட்ட வரலாற்றை கொஞ்சம் படியுங்கள்.

    ReplyDelete
  10. தெளிவான ஷிர்க்

    ReplyDelete

Powered by Blogger.