சம்பந்தனின் பெருநாள், வாழ்த்துச் செய்தி
“ரமழான் பெருநாள் கொண்டாட்டத்தின் போது, எமது தேசத்தின் நல்லுறவுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதுடன், நாட்டின் ஒன்றுமையை உலகுக்கு எடுத்துக்காட்டவும் செயற்படுவோமாக” என்று, ரமழான் பெருநாளுக்கான வாழ்த்துச் செய்தியில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும், எனது இதயங்கனிந்த ரமழான் பெருநாள் வாழ்த்துகள். புனித ரமழான் மாதத்தின் நிறைவை, நினைவு கூரும் முகமாக, இந்த நாளை நாம் கொண்டாடுகின்றபோது, இப்பண்டிகையின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், சகோதரத்துவ உணர்வோடு நாம் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை, இல்லாதவர்கள் மேல் காட்டும் கரிசனையையும் எமது சிந்தையில் கொள்வோமாக.
இந்த ரமழான் பண்டிகையானது, எமது மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை, மேலும் வலுவாக்குவதாக அமைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment