என்னை என்ன செய்ய சொல்றீங்க...? (மனோ கனேசனின் வேதனை)
தமிழருக்கு ஒரு நோய் இருக்கு. (பலதில் இதுவும் ஒன்று..!)
கால்சட்டையை மடித்துவிட்டு, மழையில குடை பிடித்துக்கொண்டு, வெள்ளத்தில நடந்து, வீடு வீடா போய் நலம் விசாரித்து, செத்த வீட்டுக்கும் போய் ஆறுதல் சொல்லி, நிவாரண பொருட்கள் வழங்கி, தெருவோர டீக்கடையில் சாப்பிட்டு...., அப்புறம் இதை பார்த்து, இன்னமும் நாலு பேராவது செய்யட்டுமேன்னு, படம் பிடித்து, ஊடகத்தில் போட்டால், அது "விளம்பரமாம்".
யூஎன்பி தெவரப்பெருமவை, ஜேவிபி அனுர திசாநாயக்கவை பார்த்து நாம் பாடம் படிக்கணுமாம். அவர்களது படங்கள் ஊடகத்தில் வந்தால் அது, "மக்கள் பணியாம்'. நம்ம படங்கள் வந்தால் அது, "அரசியலாம்".
அடக்கடவுளே! அத்தனைக்கும் நண்பர்கள் தெவரப்பெரும, அனுர பற்றி நான் ஒன்னுமே சொல்லவில்லை. அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும். என் வேலையை நான் செய்றேன்.
உண்மையில் 2000ம் வருடங்களில் இரத்தினபுரி வெள்ளம் வந்த நாள் தொட்டு நான் இப்படி ஊர்-ஊரா போய் என்னால் இயன்றதை செய்து கொண்டுதான் இருக்கேன். எத்தனை பேருக்கு இது தெரியுமோ, தெரியலை!
நம்மை தாழ்த்தி, பெரும்பான்மை இனத்தவரை தேடிப்பிடித்து தூக்கி நிறுத்தும், இதுவொரு “தாழ்வு சிக்கல்” மனநோய். நம்மவர் சிலருக்கு இந்நோய் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன்.
Mano Ganesan
Post a Comment