வெள்ளம் வழிந்தோடிய பின், பார்வையிடம் செல்லும் எதிர்க்கட்சி..!
தென்னிலங்கையில் அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு இன்றைய தினம் எதிர்க் கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரடியாக சென்று பார்வையிடவுள்ளார்.
அண்மைக்காலமாக நீடித்த தொடர் மழை யால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக 208 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்னிலங்கையின் காலி, மாத்தறை மாவட்டங்களும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களும் இந்த அனர்த்தத்தின் காரணமாக முழுமையாக சீர்குலைந்துள்ளன.
மழையுடன் கூடிய வானிலை தொடர்கின்ற நிலையில் அனர்த்தினால் ஏற்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு செல்லவுள்ளார்.
இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா எம்.பி, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி உள்ளிட்ட மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் சுயநலவாதிகள், பிரிவினைவாதிகள் இவர்களால் இந்த நாட்டிற்கு ஏதாவது நல்லது நிகழ்ந்ததுண்டா?
ReplyDelete@IK MS,
Deleteமுஸ்லிம் தலைவர்களை போல பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது மாதிரி நாடகம் நடித்து, அதை photo எடுத்து media க்கு கொடுக்கசொல்கிறீர்களா?
ஆனால், எப்படிதான் முஸலிம் தலைவர்கள் சிவாஜி மாதிரி ஓவர்-acting செய்தாலும் பௌத்தர்கள் மன்னிக்கிறார்கள் இல்லையே?
Unga muslinal mattum nalathu nadanthu iruka??
ReplyDeletemuditi velya paru