Header Ads



ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த, மஹிந்தவுக்கு அழைப்பு

ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்றும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்து நாட்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மகிந்த ராஜபக்ச, ரோக்கியோவில் இருந்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்கா அரசாங்கத்தின் அழிவுகரமான கொள்கைகளால், தம்மால் தப்பிப்பிழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள், குறிப்பாக வாகன ஏற்றுமதியாளர்களான வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்லுமாறு அவர்கள் கூட்டு எதிரணியிடம் கேட்டுக் கொண்டனர்” என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

2 comments:

  1. anda naattkuku ahadiyaaha poi shernda kuthathuku wenumna nega aatshi amaikiradu nalla irukum aana enga naatula waalrawangaluku wenam

    ReplyDelete

Powered by Blogger.