நெஞ்சில் இஸ்ரேல் கொள்கை, பலஸ்தீன கொடியை சுமக்க வெட்கமில்லையா ?
மஸ்ஜிதுல் அக்ஸா இமாமுக்கு பெட்டிசையும் கஞ்சிக்கோப்பையையும் கொடுத்து பலஸ்தீன் மக்களையும் இலங்கை முஸ்லீம்களையும் நல்லாட்சி அரசு ஏமாற்ற மேற்கொண்டுள்ள முயற்சியானது மிகவும் வெட்கக்கேடான செயல் என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டார்.
அவரது ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
நேற்று அலறி மாளிகையில் இடம்பெற ஜனாதிபதியின் இப்தாரில் கலந்துகொள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இமாம் என்று ஒருவரை பலஸ்தீனத்துக்கான இலங்கை தூதுவர் பவ்சான் அன்வர் அழைத்து வந்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலும் சரி அதற்கு முன்னரும் சரி இஸ்ரேலுக்கு மூடப்பட்டிருந்த இலங்கை கதவை திறந்து விட்ட இந்த நல்லாட்சி அரசு அண்மையில் இடம்பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான ஐ நா வாக்கெடுப்பில் கலாந்துகொள்ளாமல் முதுகெழும்பு இல்லாமல் ஒழிந்துகொண்டு பலஸ்தீன அப்பாவி மக்களுக்கு மாத்திரம் அன்றி இலங்கை முஸ்லிம்களுக்கும் பாரிய துரோகம் இழைத்துவிட்டது.
அது மாத்திரம் அல்லாமல் இஸ்ரேல் சிறையில் வாடும் பலஸ்தீனர்களின் விடுதலைக்காக இலங்கையில் உள்ள பலஸ்தீன் தூதரகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த றாஜபச்க்ஷ முந்தியடித்து சென்று கையெப்பம் இட நல்லாட்சி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதற்காக நேரம் இருக்கவில்லை.
இப்படியாக எல்லா விடயங்களிலும் பலஸ்தீன மக்களை ஏமாற்றி வரும் நல்லாட்சி அரசு இலங்கை முஸ்லிம்களை பலஸ்தீன இமாமை அழைத்து வந்து ஏமாற்ற முனைந்துள்ளது மிகவும் வெட்கக்கேடான செயலாகும்.
இலங்கை முஸ்லிம் விவகாரத்தை சர்வதேசம் வரை எடுத்து செல்லப்படுவதின் ஊடாகவே எமக்கு தீர்வை பெற்றுக்குகொள்ள முடியும் கூறுபவர்கள் இந்த நிகழ்வு மூலம் இலங்கை முஸ்லிம் பிரச்சினை சர்தேச மயப்படுத்தப்படவில்லை என்பதை சான்றுபகர்கிறது.
முஸ்லிம் நாடுகளில் இலங்கை முஸ்லிம் பிரச்சினைகளை கொண்டுபோய் அரசுக்கு அழுத்த கொடுக்க வேண்டிய பவ்சான் அன்வர் போன்றவர்கள் சமூகத்தை மறந்து நல்லாட்சிக்கு தரகர் வேலை பார்த்துள்ளது கவலையளிக்கிறது.
பலஸ்தீன மக்களுக்காக வாக்களிக்காமல் ஓடி ஒழிந்து விட்டு பலஸ்தீன் ஆதரவு கொடியை தோழில் சுமக்க ஜனாதிபதிக்கு வெட்கம் இல்லையா என தான் கேட்க விரும்புவதாக இபாஸ் நபுஹான் அவர்களின் ஊடக பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
MY3 பளு சேனாவுக்கும் + பொது பளு சேனாவுக்கும் நடந்த சீரியலை மறைக்க புனித ரமலானின் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நேரம்தான் இவனுக்கு சுப நேரமாய் போய் விட்டதே....
ReplyDeleteசமூகத்தை விற்றுப் பிழைக்கும் எமது 21காவி யணியாத பூசாரிகளும் நேற்று MY3 பளு சேனாவின் " கஞ்சி தன்சலில் " கலந்து கொண்டது ... டீல் "தாச " க்கும் "சாரனுக்கும்" நல்லதொரு தருணமாய் போய் விட்டது. எமது பூசாரிகளை அடுத்த தேர்தலில் " மஞ்சள் காவியுடை போர்த்தி வீட்டுக்குள்ளே பூட்டிவைப்போம்.
எச்சைகளை,அகற்றும் வரை நம்முடைய சமுதாயத்தில் மாற்றங்கள் எதுவுமே நடக்காது எப்போது,நரபலி,கேடியை அழைதானுகளோ அன்றைக்கு ஆரம்பித்து தான் சனினீ,,[...!!
ReplyDelete