டி.எஸ்.சேனநாயக்கவின் கொள்ளுப்பேரன், வெளிவிவகார இராஜாங்க அமைச்சராகப் பொறுப்பேற்றார்
புதிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட நேற்று வெளிவிவகார அமைச்சில் பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 31ஆம் நாள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளை மாற்றம் செய்த போது, வசந்த சேனநாயக்க வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன் ஆகியோர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கவின் கொள்ளுப் பேரனான வசந்த சேனநாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் மைத்துனர் என்பதும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர், பின்னர் நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இதுவரையில் பிரதி வெளிவிவகார அமைச்சர் பதவியே இருந்து வந்தது. 2015இல் இருந்து அஜித் பெரேரா மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர இந்தப் பதவிகளை முன்னர் வகித்து வந்தனர்.
தற்போது, வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக வசந்த சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஐதேகவின் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார்.
Post a Comment