திட்டமிட்டபடி பிரிட்டன் தேர்தல், வியாழக்கிழமை நடைபெறும் - பிரதமர் தெரேசா மே
பிரித்தானியாவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 5 வைத்தியசாலைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, லண்டன் நகரம் பெரும் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள நிலையிலும் பொதுத் தேர்தல் திட்டமிட்டப்பட்டி எதிர் வரும் வியாழக்கிழமை நடைபெறும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
லண்டன் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை தொடந்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"தீவிரவாதத்திற்கு அப்பாவி மக்களை பலி கொடுத்தது போதும். இனிமேல் ஒரு உயிர்க் கூட தீவிரவாதத்திற்கு பலியாக அனுமதிக்க கூடாது" என அவசர கூட்டத்தின் போது உரையாற்றிய பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ரத்து செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரம் நாளை(05) நடைபெறும் என்றும் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment