டெங்கு நுளம்புகளுக்கு எதிராக புதுவகை நுளம்பு, மனிதர்களை கடிக்காது, தேன்தான் உணவு
டெங்கு நுளம்புகளை அழிப்பதற்காக அடையாளம் கண்ட புதிய நுளம்பு இனமொன்று, கண்டி குண்டசாலை மற்றும் பேராதனை பிரதேங்சங்களில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்திய ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் வைத்தியர் சாகரிக்க சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்டுள்ள புதிய விசேட நுளம்பு இனத்தை, சூழலில் விடுவிப்பது இன்னமும் சவாலாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய நுளம்பு இனம் மனிதர்களை தாக்காதென தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நுளம்பு பூக்களில் உள்ள தேனை மாத்திரமே உணவாக பெற்றுக் கொள்வதாக வைத்திய ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment