அவசர நிலையைப் பிரகடனம் செய்ய மறுத்த மைத்திரி
அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு பல்வேறு நாடுகளும் விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டார் என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு மேலதிக உதவிகளை வழங்குவதற்கு, அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு பல நாடுகள் கேட்டுக் கொண்டதாகவும், அதனை சிறிலங்கா அதிபர் நிராகரித்து விட்டதாகவும் அமைச்சர் டிலான பெரேரா குறிப்பிட்டார்.
அவசர கால நிலையை பிரகடனம் செய்தால் அது நாட்டின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்றே சிறிலங்கா அதிபர் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.
அதைவிட, அவசரகால நிலையைப் பிரகடனம் செய்திருந்தால் அதனை கூட்டு எதிரணியினர் தமது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment