கட்டார் நெருக்கடியால் இலங்கைக்கான, அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளது
கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணி வெகுவாக குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் பொருளாதார பிரச்சினை தலைதூக்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மூன்றாம் கட்ட கடன் தொகையும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
அத்துடன், சீனாவில் இருந்து கிடைக்கப்பெறும் என கூறப்பட்ட நிதியுதவியும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குறித்த விடயம் தொடர்பில் ஆழமாக சிந்தித்து நாட்டை மீட்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment