Header Ads



மஹிந்த ராஜ­ப­க்ஷ, மன்­னிப்பு கோர வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே இன­வா­தி­க­ளுக்கு அர­சியல் அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது. அதற்­காக அவர் பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கோர வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்­சியின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் நிறைந்த ஆட்­சி ­கா­ணப்­பட்­டது. அரச சொத்­துக்­களை முறை­கே­டாக தனிப்­பட்ட முறையில் பயன்­ப­டுத்­தினர். இதில் மாற்றம் அவ­சியம் என்­பதை கருத்­திற்­கொண்டு கடந்த 2015 ஆம் ஆண்டில் மக்கள் நல்­லாட்சி மீதான நம்­பிக்­கையில் எமக்­கான அதி­கா­ரத்தை வழங்­கினர்.

அதற்­க­மை­வாக நல்­லாட்­சியில் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளை உரு­வாக்­கி­யுள்­ள­துடன் நீதித்­துறை கட்­ட­மைப்பும் சுயா­தீ­ன­மாக இயங்­கி­வ­ரு­கின்­றது. நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டுதல்,  ஊடக சுதந்­தி­ரத்தை வழங்­கி­யமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டு மக்­களின் அபி­லா­சை­களை பூர்த்தி செய்­வற்கும் நல்­லாட்­சியில் எதிர்­பார்த்­துள்ளோம். இவ்­வா­றான வேலைத்­திட்­டங்கள் கடந்த தேர்தல் காலத்தில் நாம் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களாகும்.

இலங்­கையில் கடந்த 30 ஆண்­டுகள் நில­விய யுத்­தத்தை நிறைவு செய்த முன்னாள் ஜனா­தி­ப­தியால் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். எனினும் அதனை அவர் தவற விட்­டு­விட்டார். அவ­ரது ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே இன­வாதம் தலை­தூக்க ஆரம்­பித்­தது. எவ்­வித நீதியும்,பொறுப்­புக்­கூ­றலுமின்றி நாட்டின் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

எந்த வொரு மதத்­துக்கு எதி­ரா­கவும் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்க முடியும். இதுவே அளுத்­கமை கல­வ­ரத்­துக்கும் வித்­திட்­டது.

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க் ­ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் இன­வா­தத்தை முன்­னெ­டுக்கும் அமைப்­புக்­க­ளுக்கு நிதி வழங்கி அதனை ஊக்­கு­வித்து வந்­தனர். நாட்டின் அமை­தியை இவ்­வாறு சீர்­கு­லைத்­த­மைக்­காக அவர் பகி­ரங்­க­மாக மன்­னிப்­புக்­கோர வேண்டும்.

அத்­துடன் கடந்த காலத்தில் தோற்றம் பெற்ற பொது­பல சேனா, இரா­வ­ணா­ப­லய போன்ற அமைப்­புக்கள் அர­சியல் பின்­பு­லத்­தோடு நிதி வழங்கி முன்­னெ­டுக்­கப்­பட்ட அமைப்­புக்­க­ளாகும். குறிப்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச, தான் அமைச்­சுப்­ப­த­வியில் இருக்கும் காலத்தில் இரா­வ­ண­ப­லய அமைப்­பி­ன­ருக்கு வாகனம் வழங்­கி­யத்­தற்­கான ஆதா­ரங்கள் பீ அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு கடந்த ஆட்சிக்காலத்தின் போது இன­வா­தி­க­ளுக்கு அர­சியல் அந்­தஸ்த்தை வழங்­கி­ய­வர்கள் தற்­போது நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும் சக­லரும் ஏற்­றுக்­கொள்ளும் ஓர் அர­சி­ய­ல­மைப்­பொன்று முன்­னெ­டுக்கும் பட்­சத்தில் அதில் குழப்பம் விளை­விப்­ப­தற்­கா­கவே குறித்த இன­வாத பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.

எனினும், அதற்­காக ஒரு­போதும் நாம் நல்­லாட்­சியில் எமது வேலைத்­திட்­டங்­களை பின்­நோக்கி செல்­ல­விடமாட்டோம். தற்­போது இன­வாதம் பரப்பும் எவராயினும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். அத்துடன் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்றார்.

9 comments:

  1. In order to enjoy the comfort life and protect nalladtchi .
    Whatever happened you guys still blame Mahinda?

    ReplyDelete
  2. In order to enjoy the comfort life and protect nalladtchi .
    Whatever happened you guys still blame Mahinda?

    ReplyDelete
  3. சட்டமா அது எங்கே இருக்கிறது ?

    ReplyDelete
  4. Mr.Mujibur Rahman,

    i am kindly requesting you to stop blaming ex president. we all knew that racism started during his presidency and the mean time he has received sentence for not taking action against Gnasasari himi.

    current situation is worst then, MR period. he never appointed any of BBS members in to some political positions, he never invited any racist in to parliment, he never hold any talks with any of BBS members publicly.

    but, all these things happens in Yahapalanaya, in your government. billions of rupees has burnt with in two months, low not imposed on BBS, it seems Mr.President encouraging Racism by providing political positions, Mr.Priminister busy in travelling.

    top of this, still our MP's are not even able to boycott ifthar. shame on us.

    compare the situation right now wiht ex president period, it seems MR better then any one of yahapalanaya.

    its my openion only.

    ReplyDelete
  5. மன்னிப்புக்கோரினால் எல்லாம் முடிந்திடுமா முட்டாள் ரஹ்மான் அவர்களே?
    Stop concentrating and talking nonsense, it's no point to pinpoint their mistakes those non Muslims never ever gonna favor to us.
    You Muslim idiot mps stop a$& licking and concentrate on uniting our community and educting them.

    ReplyDelete
  6. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்... அதேபோல் உங்க தலைவர் தற்கொலை செய்ய வேண்டும்.. நீங்கள் எல்லோரும் இது போல அறிக்கை விட மட்டுமே தகுதியானவர்கள்... உங்கள் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை உலகமே அறியும்... மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள்... உங்கள் தலைவர்களை திருப்தி படுத்த முன் உங்களைப் படைத்த இறைவனை திருப்தி படுத்துங்கள்... ஏமாற்றுகிறார்கள் அரசியலில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்... இன்னும் எத்தனை காலம்தான் மகிந்தவை குற்றம் சொல்வீர்கள்... உங்களின் தலைவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்றால் தயவுசெய்து முஸ்லிம்களின் விஷயத்தில் போலியான அறிக்கை விடாமல் அமைதியாக இருங்கள்... 21 பேரும் நாளை பொறுமை நாளில் கண்டிப்பாக இவை அத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டும்... எங்கள் இரத்தம் கொதிக்கிறது அந்த ஞானசார அல்லாஹ் வையும் குர்ஆனை பற்றியும் மோசமான முறையில் கதைக்கும் போது... அந்த கயவனுக்கு பாதுகாப்பு மற்றும் அடைக்கலம் கொடுத்த உங்கள் அமைச்சர்களை எதிர்த்து எதுவும் பேசாமல் சம்பந்தமில்லாமல் அறிக்கை விடும் உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் இன்னும் இந்த சமூகத்திற்கு தேவையில்லை.. எங்கள் சாபம் உங்கள் 21 பேருக்கும் உண்டு.. கயவன் ஞானசார நேரடியாகத்தான் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கிறான் ஆனால் நீங்களோ முஸ்லிம்களின் முதுகில் குத்திவிட்டீர்கள்...எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ்...மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
  7. i am not from his district, but i thank for those people whose brought Mr.Mujibur Rahaman by their valuable votes, an educated, brave and intellectual Muslim politician who love his community, he is not only representing his district but also on behalf of our Muslim community. keep up your good work sir., your voice is our strength.

    ReplyDelete
  8. முட்டாள் ரஹ்மான் அவர்களே

    ReplyDelete

Powered by Blogger.