Header Ads



சோறு உட்­கொண்ட தாயும், பிள்ளைகளும் இரத்த வாந்தி

வீட்டில் இரவு சமைத்த உண­வினை உட்­கொண்ட தாயும், இரு பிள்­ளை­களும் இரத்த வாந்தி எடுத்­துள்­ளனர். இத­னை­ய ­டுத்து அவர்கள் கதிர்­காமம் அர­சினர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டு, சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

கதிர்­கா­மத்தை அண்­மித்த கிரா­ம­மொன் றில் வசித்து வந்த மூவரே, இவ்­வாறு கதிர்­காமம் அர­சினர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்கின்றனர். இச்­சம்­பவம் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.

கதிர்­கா­மத்தை அண்­மித்த கிரா­மக்­க­டை­யொன்றில் வாங்­கிய அரி­சி­யி­லேயே, உணவு  சமைக்­கப்­பட்­டுள்ளது. 

மருத்­து­வ­ம­னையில் நோய்­வாய்ப்­பட்­டி­ருப்­ப­வர்கள் உண்ட உணவின் மாதி­ரிகள் பரி­சோ­திக்­கப்­பட்­டபோதும், அவ் உணவில் உடைந்த போத்தலின் துகள்கள் கலக்­கப்­பட்­டி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது.

 இதை­ய­டுத்து, கடையில் கொள்­வ­னவு செய்த அரி­சியின் ஒரு பகுதி வீட்­டி­லி­ருக் கும் போது, அதனை பரி­சீ­லிக்­கையில், அவ் அரி­சி­யிலும் உடைந்த போத்தல் து கள்கள் இருப்­பது கண்டு பிடிக்­கப்­பட்­டன. சமைத்த உண­விலும் அதே போத்தல் துகள்கள் காணப்­பட்­டன. இது குறித்து, கதிர்­காமம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­ தி­காரி உபாலி காரி­ய­வ­ச­மிடம் புகார் செய் யவே, அரிசியை விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.