மொஹமட் மனோஜ் கொலை, பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு மரண தண்டனை
சந்தேகநபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை உயர்நீதிமன்றத்தினால் இன்றைய தினம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1990-6-1 திகதியன்று பாணந்துறை விசேட குற்ற விசாரணை பிரிவினால், மொஹமட் மனோஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்
கொள்ளை குற்றச்சாட்டிற்கமைய பண்டாரகம, அட்டழுகம பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் மனோஜ் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி வெடித்தமையினால் சந்தேகநபர் உயிரிழந்துள்ளர்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவர்களின் உறவினர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸ் அதிகாரிகள் மீது இரு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
பாதாள உலகக்குழுவின் உறுப்பினர்களாக இருந்தமை மற்றும் கொலை குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதலாவது குற்றச்சாட்டுக்காக குற்றவாளிகளுக்கு 6 மாதங்கள் கடுமையான வேலையுடன் கூடிய சிறைத் தண்டனை மற்றும் 5000 ரூபாய் என தண்டப் பணம் செலுத்துமாறு பாணந்துறை உயர்நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவன்தன உத்தரவிட்டுள்ளார்.
இரண்டாவது குற்றச்சாட்டிற்காக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
Post a Comment