Header Ads



''கட்டாரில் உள்ள இலங்கையர்கள், தவறான வழியில் சென்றுவிடக் கூடாது''

கட்டாரில் பணியாற்றும் 150000 இலங்கையர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கையில் உள்ள கட்டார் தூதரகம் தெரிவித்துள்ளது.

எனவே கட்டாரில் உள்ள இலங்கையர்கள் பிழையான வழியில் சென்றுவிடக்கூடாது என்றும் தூதரகம் கோரியுள்ளது.

இலங்கையர்களை பொறுத்தவரை கட்டார் அவர்களின் இரண்டாவது வீடாகவே கருதப்படுகிறது.

இந்தநிலையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு மற்றும் டோகாவில் உள்ள இலங்கை தூதரகம் என்பனவும் இலங்கையர்கள் கட்டாரில் பிரச்சினைகள் இன்றி தமது வாழ்க்கையை கொண்டு செல்வதை உறுதிப்படுத்தியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தி பஹ்ரெய்ன், சவூதி, ஐக்கிய அரபு ராச்சியம், யேமன், என்பன கட்டாருடனான உறவுகளை கடந்த மாதம் துண்டித்துக்கொண்டன.

இதனையடுத்து எழுந்துள்ள சூழ்நிலை தொடர்பில் கட்டார் தூதரகம் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.