தம் மானசீக வீரனாக, ஞானசாரரை அங்கீகரித்த அரசு
சிங்களத்தில்: கே.டபிள்யூ. ஜனரஞ்சன
தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்
அக்கிரமங்களுக்கெல்லாம் கதாபாத்திரமேந்தி காவியுடை தரித்த கொலை வெறியனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் இந்த தனி பிக்குவுக்கு ஆச்சரியப்படத்தக்க வாய்ப்பொன்றுதான் கிடைத்திருக்கிறது. அவர் சட்டத்தின் முன் முகம் கொடுக்கத் தவறும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டில் சட்டம் எந்தளவு தூரம் பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது. அத்துடன் அரசுக்கும் இதன் மூலம் பலத்த அவமானம்தான் விளைந்து கொண்டிருக்கிறது.
முஸ்லிம்கள் மீதான குரோதத்தை வளர்த்து வரும் அடிப்படைவாத சிங்கள பௌத்தர்களுக்கு பகிரங்க வீரனாக ஞானசார விளங்குகிறார். வில்பத்து வனங்கள் அழிப்பு, மன்னாரில் காணிகள் கைப்பற்றிக் கொள்ளல், பௌத்த சின்னங்கள் அழித்தல், சிங்கள இனம் பெருகுவதை கட்டுப்படுத்த முயற்சித்தல், வர்த்தகத் துறையில் மேலாதிக்கம் செலுத்துதல் போன்ற சொல்ல முடியாத போலிக் காரணங்களையெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளுக்கு இன்றிருக்கும் மாவீரன் ஞானசார தேரர்தான்.
முஸ்லிம்களுக்கு எதிராக பலவாறான கட்டுக்கதைகளையும் பரப்பியும் பல்வேறு உருவிலும் பல்வேறு அமைப்புக்களாகவும் திரண்டு அடிப்படைவாதிகள் களத்தில் குதித்திருக்கிறார்கள். இவை அனைத்துக்கும் ஞானசார தேரரே தலைமைத்துவம் வழங்கி முன்னணியில் திகழ்கிறார். தன்னை வீரனாகக் காட்டிக் கொள்ளும் போர்வையிலேயே ஞானசார இவ்வாறு துடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் அடிப்படைவாதத்திற்கு பகிரங்கமாக ஆதரவளிக்காத இலங்கை மக்கள் மத்தியில் தன்னைத் தொடரும் பௌத்த அடிப்படைவாதிகளுக்கு எத்தகைய பீதியுமின்றி செயலாற்றுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் ஊட்டிக் கொண்டிருப்பது ஞானசார தேரர்தான். அது அவரது காவியுடைதரித்த பிக்கு என்ற பலத்தைப் பயன்படுத்தியே சாதித்துக் கொண்டிருக்கிறார்.
முஸ்லிம்களுக்கு எதிராக இலக்கு வைத்து செயற்படும் நடவடிக்கைகளும் இவர்களது நோக்கமும் என்னவென்று நன்கு தெளிவாகவே புலப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக எல்லாப் புறங்களில் இருந்தும் இயன்ற வரையான எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தாக்குதல்களை மேற்கொள்வது, தமது தலைவரான ஞானசார தேரருக்கு போதிய பாதுகாப்பு வழங்குவது போன்ற காரியங்களிலும் இதுவரை ஈடுபாடு காட்டி வருகிறார்கள். இத்தகையோரை இலகுவாக இனங்கண்டு கொள்ள முடியும்.
ஆனால் இனம் கண்டுகொள்ள முடியாத, இன்னொரு கூட்டமும் இருக்கவே செய்கிறது. இத்தகையோரை இனங்காண்பது சிக்கலாகவும் விரைவில் இனங்கண்டு கொள்ள முடியாமலும் இருக்கிற இக்கூட்டத்தினர் குறித்து தான் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. சிங்கள மக்கள், சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒருதாய் மக்கள் போல் இருக்க வேண்டும்; சமாதானம், சகவாழ்வு போன்ற பண்புகளை நாடு முழுவதும் விதைக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே மறுதலையாக கரண மடிக்கும் சிலரே மேலே சுட்டிக்காட்டியுள்ள அடுத்த கூட்டத்தினராவர்.
இந்த சின்னஞ்சிறு நாட்டில் ஞானசார தேரர் இவ்வளவு காலமும் மறைந்திருக்கிறார் என்றால் அரசாங்கத்திலுள்ள மிகவும் முக்கியமான ஒருவரின் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படுவதே காரணமென ஊகிக்க முடிகிறது என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.
சில சில விடயங்களைச் செய்வதன் மூலம் ஞானசார தேரரைக் காப்பாற்ற முயல்வோர் முன்பு குறிப்பிட்ட இரண்டாம் கூட்டத்தைச் சேர்ந்தோராவர்.
பொலிஸாருக்கும் அரசாங்கத்துக்கும் இயன்ற வரையில் உள்ளிருந்து மறைமுகமாக அழுத்தங்களைக் கொடுத்து ஞானசாரவைக் கைது செய்வதில் நின்றும் தடுத்துக் கொண்டிருப்போர் இவர்களாவர். மேல் மட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருந்துவிட்டு இப்போது இந்த அரசின் அபிமானிகளாக இருக்கும் அரசியல்வாதிகள், உயர்நிலையிலுள்ள பிக்குமார்கள் என்று ஒரு பெருங்கூட்டமே இந்த இரண்டாம் நிலைக் கூட்டத்தில் அடங்குகின்றனர்.
எந்தவொரு விடயங்களையும் செய்யாது ஞானசார தேரரை சட்டத்தின் முன்கொண்டுவராது தடுக்கும் கூடடத்தில் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் உட்பட அரச அதியுயர் மட்டத் தலைவர்கள் காணப்படுகிறார்கள்.
இந்த ஆட்சியமைப்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் மஹிந்த சிந்தனையின் ஒரு பகுதியாக விளங்கிய இன, மதவாதத்தால் நாடு எதிர்கொண்ட நாசகார அழிவுகளை முன்வைத்தே பதவிக்கு வந்தனர் என்பதே யதார்த்தமாகும்.
முஸ்லிம் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்கள் மேற்படி தாக்குதல் சம்பவங்கள் குறித்து விரிவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அறிய முடியவில்லை. குற்றமிழைத்தோர் பரந்தளவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவுமில்லை. மேற்படி பொறுப்பான பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு பொலிஸார் அவர்கள் கடமையைச் செய்யட்டும் என்று விட்டு விட்டு தன்பாட்டில் இருப்பதைத் தான் அரசு கண் துடைப்பாக செய்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுவது குறித்து பொலிஸார் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது, இருப்பது குறித்தும் ஞானசார தேரர் கைது செய்யப்படாமை குறித்தும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து கதைப்பதற்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.
அதுவும் மிகவும் காலங் கடந்தே சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது.
அரசின் இத்தகைய செயற்பாடு எதனை உணர்த்துகிறது? ஞானசார தேரரை தம் மானசீக வீரனாக அரசு அங்கீகரித்திருப்பதை உணர்த்துவதாகத்தானே உள்ளது.
நன்றி: ராவய
Wau super govermentt i never seen all Sri lanka history this kind of goverment and officer.
ReplyDeleteஇலங்கையில் நீதி நிலைநிறுத்தப்படவும் சிறுபான்மைச் சமூகங்களும் தேசிய நீரோட்டத்தில் சமஅந்தஷ்த்து வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்படவும் சிங்கள மக்களிடையே இத்தகைய முற்போக்கான பத்திரிகைகள் , எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சமயப்பெரியார்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என பல்துறைசார்ந்தவர்களும் உருவாக்கப்படுகின்றபோது அதற்கு சமாந்தரமாக சிறுபான்மையினரும் நம்பிக்கையோடு அவர்களை அங்கீகரித்து போசிக்கவேண்டும்.
ReplyDeleteபரஸ்பரம் சந்தேக கண்கொண்ட பார்வையைக்கழைவதும் அவசியமாகும்.
LTTE PRABAKHARAN
ReplyDeleteGOERGE BUSH
FIR AWN
KAAROON ALL ARE GOOD EXAMPLE
How Allah Destroyed them.
Please be wait and see.
Allah newer leave oppressing people
While acknowledging this , we should be mindful of the fears of the majority community raised over and over by Min.Champika and Gnanasara himi , no matter how unreasonable it may sound. That is Muslims are gradually turning into Saudi Wahabists /extremists, and the telltale signs are the recently introduced, black niqab for females, jubba /thobes for males. In their perception in the future, there will be Afghanistan like violence here. How this reasonable concerns could be addressed in a realistic manner?
ReplyDeleteGood Qn
ReplyDelete