Header Ads



பௌத்தம் - இந்து மதங்களை காப்பாற்ற, பொதுபல சேனா தேவை - அருள்காந்

நாட்டில் பௌத்தம் மற்றும் இந்து மதங்களை காப்பாற்றுவதற்கு பொதுபல சேனா போன்ற அமைப்புகள் தேவை என, இந்து மத சம்மேளனத்தின் தலைவர் அருள் காந் இன்று (6) தெரிவித்தார்.

இராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் நேற்று(6)  இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிழக்கு மாகாணத்தில் விபுலானந்தர் சிலையொன்றினை தாபிப்பதற்கு முற்பட்டப் போது, முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதன்போது பொது பலசேனா அமைப்பின் செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரர் தலையிட்டமையினால் தான், அவ்விடத்தில் குறித்த சிலையினை தாபிக்க முடிந்தது. இத்தகைய காரணங்களினால் தான் நாங்கள் அவருக்காக இன்று பேசுகின்றோம்.

ஆதலால் நாட்டில் பௌத்தம், இந்து மதங்களை பாதுகாக்க பொதுபல சேனா அமைப்பு அவசியமாகும்.

மற்றும், மூதூர் பிரதேசத்தில் 3 பிள்ளைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் 35 பேர் கைது செய்யப்பட்டு,பாதிக்கப்பட்ட பிள்ளைகளை அடையாளம் காட்டும்படி கூறுகின்றனர். அவர்களால் எவ்வாறு அடையாளம் கண்டுக்கொள்ள முடியும்? அதற்காக தான் இன்று டி.என்.ஏ பரிசோதனை இருக்கின்றதே, அதை பயன்படுத்தலாம் அல்லவா?

குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஒருசில சந்தேகநபர்களின் சார்பில் முன்னிலையாவதற்கு சட்டத்தரணிகள் சிலர் முன்வந்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் சார்பில் முன்னிலையாவதற்கு எவரும் முன்வரவில்லை. 5 பொலிஸ் அதிகாரிகள் மட்டு​மே குறித்த பிள்ளைகளின் சார்பில் குரல் கொடுத்தனர். அவர்களும் சிங்கள பொலிஸ் அதிகாரிகள் என, அருள் காந் தெரிவித்தார்

15 comments:

  1. We have to take this guy seriously it means they collaborate with BBS to attack the mosques and businesses. The CID should check this link and find out is there any connection between the rape case. It seems there is big plot to disturb the relationship between Tamil and Muslim.

    ReplyDelete
  2. 100% unmai our leader Jana Sara and arulkanth

    ReplyDelete
    Replies
    1. கிழக்கில் முஸ்லீம் அரசியல் வாதிகள் தமிழருக்கு எதிராக இனவாதம் கக்குவது உண்மையே.
      அதற்காக ஒரு இனவாத குழுவுடன் இணைந்து இன்னெரு இனவாத குழுவை எதித்து போராட முடியாது.
      தமிழர் ததனிவழி அரசியலே தமிழரை காத்ததது இனீயும் காக்கும்.

      Delete
    2. கிழக்கு தமிழர்கள் தமது பலத்தை நிருபிப்பதே இதற்கு சரியான பதிலடி.கிழக்கு தேர்தல் களம் காணதயாராகுங்கள்..

      Delete
  3. தங்கள் தங்கள் மதம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் மதநூல்களின் உள்ளடக்கங்களையும் போதனைகளையும் முறையாக வாசித்து தெளிவுபெற்று நடைமுறை வாழ்க்கையில் கொண்டுவந்தாலே போதுமானது.
    மாற்று மதத்தில் மூக்கை ஙழைத்து பிழைகாணவும் இழிவுபடுத்தவும் வேண்டிய தேவை யாருக்கும் இல்லை. இது பண்பாடுமல்ல, மனித உரிமையுமல்ல.
    ஆனாலும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் திரைமறைவிலான சுகபோகங்களுக்காகவும் பிற மதத்தை தாக்குவதை சிலர் தமது ஆயுதமாக கையிலெடுத்துள்ளனர்.
    ஆனாலும் இஸ்லாத்தின் ஒளியை யாராலும் ஊதி அணைக்கவும் முடியாது, உலகம் முடியும் வரை வீழ்த்தவும் முடியாது .
    ஐயா! காவிகளே(கீழ்த்தரமான சிந்தனை கொண்டவர்களுக்கு மட்டும்) இஸ்லாம் உண்மையான வேதம். அது எங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. நீங்களும் படித்துப் பயன்பெறுங்கள். இல்லையா உங்களது வழியில் செல்லுங்கள். லக்கும் தீனுக்கும் வொலியதீன்.

    ReplyDelete
  4. I hope The raped guy is mr . Arulkanth... he has done and make story with BBS

    ReplyDelete
  5. ஞானசாருடன் சேர்த்து இவரையும் கைது செய்யும்படி அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  6. சிறுபான்மை சமூகங்கள் என்ற வகையில் எம்மைப் பிரிப்பதே சிங்கள சமூகத்தின் வெற்றி. அதற்கு இவ்வகை மடமைகள் பகடைக் காய்கள். இவனின் கருத்து வெறும் பைத்தியக்காரன் தனமானதே.

    ReplyDelete
  7. சிறுபான்மை சமூகங்கள் என்ற வகையில் எம்மைப் பிரிப்பதே சிங்கள சமூகத்தின் வெற்றி. அதற்கு இவ்வகை மடமைகள் பகடைக் காய்கள். இவனின் கருத்து வெறும் பைத்தியக்காரன் தனமானதே.

    ReplyDelete
  8. குமார் நல்லதான் பகற் கனவு காண்கிறார் போல்.

    ReplyDelete
  9. பொது பல சேனாவிற்கு காரியமாகும்வரை மட்டுமே இந்த அருண்காந்தன் எல்லாம். இந்த அருகந்தன் இந்திய ஆர் எஸ் எஸ் அடிப்படைவாத அமைப்பின் இலங்கை கிளை தலைவன். என்று இந்தியாவின் தலையீடு இலங்கையில் அதிகரித்து சிங்களவர்கள் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கண்டு அஞ்சுவார்களோ அன்று பொது பல சேனாவே இவனை சப்பி துப்பிவிடும். அத்தோடு மூதூர் பிரதேச அசம்பாவிதத்திற்கு இந்த நாயும் காரணமாக இருக்கலாம். இந்தியாவில் இவர்கள் செய்யும் தில்லு முல்லு என்ன என்பதை உலகமே அறியும்

    ReplyDelete
  10. பணம் பத்தும் செய்யும்
    இந்த அருள்காந்த் என்னும் அடிவருடியும் அதே ரகம்தான்

    ReplyDelete
  11. ஐயா அருள்காந் அவர்களே!
    இந்து மத சம்மேளனத்தின் தலைவராக இருந்துகொண்டு இந்து மதத்தை பாதுகாக்க பொதுபலசேனாவால்தான் முடியும் என்பதை பார்க்கும் போது உங்கள் அப்பாவித்தனம் தெரிகிறதே.
    நீங்கள் இந்துமத சம்மேளனத்துக்கு அருகதையற்றவர். உங்கள் பதவியை ஞானத்திடம் ஒப்படைத்துவிட்டு கோயில் வாசலில் நின்று வரும் புண்ணியவான்களுக்கு சேவகம் செய்யுங்கள் புண்ணியமாவது கிடைக்கும்.

    ReplyDelete
  12. Don't need to take this boot licker Arulkanth seriously. He is not a Hindu leader.

    ReplyDelete

Powered by Blogger.