முஸ்லிம்களுக்கு அதிக குழந்தை பெற வேண்டாமென, சிங்கள வைத்தியர்கள் ஆலோசனை வழங்குவதாக குற்றச்சாட்டு
தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன,
வைத்தியசாலைகளில் சிங்கள வைத்தியர்கள் முஸ்லிம் பெண்களுக்கு அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று ஆலோசனை வழங்குவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. உண்மையில் முஸ்லிம் பெண்களுக்கு மாத்திரம் இந்த ஆலோசனை வழங்கப்படவில்லை. வைத்தியசாலைகளில் பிரசவத்துக்கு வருகை தரும் அனைத்துப் பெண்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது. தாயினதும், குடும்பத்தினதும் பொருளாதார நலன் கருதியே இந்த ஆலோசனை வழங்கப்படுகின்றது.
சிறிய குடும்பம் அமைந்தால் ஏற்படும் நன்மைகள் விளக்கப்படுகின்றன. பொ-ருளாதார பிரச்சினைகளிலிருந்தும் மீள்வதற்கு அதிக குழந்தைகள் உள்ள கர்ப்பிணித்தாய்மாருக்கே இவ்வாறு ஆலோசனை வழங்கப்படுகிறது அன்றி முஸ்லிம்களின் சனத்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கல்ல.
சீனாவில் ஒரு தாய் 2 பிள்ளைகளையே பெற்றுக்கொள்ள வேண்டும் 3 ஆவது குழந்தை கிடைத்தால் தாய்க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும்.
மத தலங்கள் தாக்குதல், வர்த்தக நிலையங்கள் எரித்தல் என்பவற்றை ஒரு சிறிய குழுவே மேற்கொண்டு வருகிறது. நாட்டில் இவ்வாறான சம்பவங்களை எந்த இனத்தவரும் விரும்பவில்லை. அடிப்படைவாத சிறு குழுவே இதன் பின்னணியில் இருக்கிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட அவர்கள் படுதோல்வியடைந்தார்கள்.
மக்கள் அவர்களை நிராகரித்தார்கள். இந்த இனவாத குழுவுக்கு சில அரசியல் வாதிகள் பெற்றோல் வழங்குபவராக செயற்படுகின்றார்கள். அரசியல் வாதிகளே அவர்களின் செயல்களுக்கு பெற்றோல் ஊற்றுகின்றார்கள். அரசாங்கம் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவற மாட்டாது.
தொல்பொருள் விவகாரம்
முஸ்லிம்கள் தொல்பொருள் பிரதேசங்களை அழிக்கிறார்கள். தொல்பொருள் காணிகளை அபகரிக்கிறார்கள் என்று தொடராக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறதே? இதற்கு ஏன் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன பதிலளிக்கையில் ‘தொல் பொருள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடாத்தி தீர்வு பெறுவதற்கு ஆணைக்குழு அமைக்க முடியாதா? என்று கேட்கிறீர்கள்.
ஏற்கனவே தொல்பொருள் விவகாரம் தொடர்பில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் திணைக்களமே இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிஸ் நடவடிக்கை எடுக்காதுவிடின் பொலிஸாருக்கு எதிராக முறையிடலாம்.
ARA.Fareel
Post a Comment