Header Ads



சவூதியின் உள்வீட்டுச் சண்டை


-Zacky Fouz-

இன்றைய கத்தார் பிரச்சினைக்கு சவூதியின் அரச பரம்பரைகுல் இடம்பெறும் அதிகார மோதலும் ஒரு பிரதான காரணமாகும். அதாவது, தற்போதைய மன்னர் ஸல்மானிற்கு பிறகு மன்னராக வரக்கூடிய இளவரசராக முஹம்மத் இப்னு நாஈப் ( Crown Prince) மற்றும் பிரதி இளவரசராக முஹம்மத் இப்னு ஸல்மான் (Deputy - Crown Prince) முன்மொழியப் பட்டிருக்கிறார்கள் என்பது அறிந்த விடயம். முஹம்மத் இப்னு நாயிப் ஸல்மானின் நேரடி மகன் அல்ல. ஆனால், அடுத்து பதவிக்கு வரும் பிரதான இளவரசராக முஹம்மத் இப்னு நாயிப் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

முஹம்மத் இப்னு நாயிஈப் இயல்பில் கட்டார் மற்றும் துருக்கியுடனான உறவை விரும்பக் கூடியவர். இந்தப் பின்புலத்தில், பிரதி இளவரசரான முஹம்மத் இப்ன ஸல்மானை 'பதவிப் போட்டியில்' முஹம்மத் இப்ன நாயிப் இற்கு பதிலாக முன்னணிப்படுத்தும் விடயத்தை மன்னர் ஸல்மான் கையில் எடுத்திருக்கிறார் என்றதொரு அவதானம் பலமாக வாதிக்கப்படுகிறது.

இதற்கு , ட்ரம்புனான உறவைப் பயன்படுத்தி முஹம்மத் இப்னு நாயிபின் கொள்கைகள் , திட்டங்கள் மற்றும் அவருக்கு அரசவையில் இருக்கும் அதிகாரங்களை மட்டம் தட்டும் முயற்சியை மன்னர் ஸ்லமான் மற்றும் மகன் முஹம்மத் இப்னு ஸல்மான் முன்னெடுக்கிறார்;கள். மறுபுறம், எமிரேட்ஸூம் இந்த பலப்பரீட்சையில் முஹம்மத் இப்னு ஸல்மானுக்கு சார்பாக களத்தில் குதித்திருக்கிறது.

தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் சவூதியின் அரச பீடம் இணைந்து ஸல்மானின் மகன் முஹம்மத் இப்னு ஸல்மானை முற்படுத்தி இளவரசர் முஹம்மத் இப்னு நாயிபை கவனமாக பிற்படுத்தும் நகர்வுகளை மேற்கொள்வதனை அவதானிக்க முடியும். எனவே, கத்தார் விவகாரமானது , 'ஈரான் - கத்தார் உறவு' என்ற சோடிக்கப்பட்ட கதைகளை விட , முஹம்மத் இப்ன ஸல்மானுக்கும் , முஹம்மத் இப்ன நாயிபிற்கும் உள்வீட்டு பலப்பரீட்சைக்கு பழிக்கடாவாக்கப்பட்ட ஒன்றாகவும் பார்க்க முடியும்.

மத்திய கிழக்கு தொடர்பான அரசியல் ஆய்வாளர்/ டேவிட் ஹியரஸ்ட்

2 comments:

  1. ஜோர்தானிலும் மன்னர் ஹூசைனின் மரணத்திற்கு பின் மேற்குலகம் இப்படித்தான் செய்தது. உன்னை அறிந்தால் நீ நயிப் உன்னை அறிந்தால் உலகினில் போரடலாம்

    ReplyDelete
  2. shiiit this is bloody shiiit don't post these shiiits

    ReplyDelete

Powered by Blogger.