தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு நல்லபெயர் - ஏன் தெரியுமா..?
கொரிய பெண்னை காப்பாற்றியதால் இலங்கை ஊழியர்கள் பிரபல்யம் பெற்றிருப்பதாக தென்கொரிய மனிதவள அபிவிருத்தி சேவையின் தலைவர் போராசிரியர் பார்க் யங் பம் (Park Young-bum) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பார்க் யங் பம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அண்மையில் கொரியாவில் கட்டடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் போது தமது உயிரைப் பணயம் வைத்து பெண் ஒருவரைக் காப்பாற்றிய இலங்கை ஊழியரின் செயல் காரணமாக கொரியாவில் இலங்கை ஊழியர்கள் பிரபல்யம் பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
விவசாயத்துறையில் இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிப்பதற்கான சாத்தியத்தன்மை தொடர்பாக ஜனாதிபதி வினவியுள்ளார்.
இதன்போது, தென்கொரிய மனிதவள அபிவிருத்தி சேவையின் தலைவர் இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிக்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.
மேலும், மீன்பிடித்துறை மற்றும் விவசாயத்துறையில் உள்ள ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியமைக்காக தென்கொரிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பும் 16 நாடுகளில் இலங்கை தற்போது 5ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment