Header Ads



இலங்கையில் புதிதாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இவ்வருடம் பாடநெறிகள் ஆரம்பம்

பொத உயர்தரப் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கு, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பட்டங்களை வழங்கும் வகையில் சிறிலங்காவில் புதிதாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளதாக கடந்த 20ஆம் நாள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இந்தப் பல்கலைக்கழக்தில், பட்டங்களை வழங்குவதற்கு உயர்கல்வி அமைச்சு அங்கீகாரம் அளித்துள்ளது, இதையடுத்து, 2017ஆம் ஆண்டு கபொத உயர்தரத் தேர்வில் சித்தியடைந்து, இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான பட்டக் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படும்.

பிரித்தானியாவின் லன்காஸ்டர் பல்கலைக்கழகம்,  அவுஸ்ரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம், ஆகியவற்றுடன் மாணவர்களை பரிமாறிக் கொள்ளும் உடன்பாட்டிலும் , இந்த புதிய பல்கலைக்கழகம் கையெழுத்திட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜோர்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மற்றும் டெக்சாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், நியூசிலாந்தின் லிங்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடனும், இதேபோன்ற உடன்பாடுகளில் கையெழுத்திடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.