மதவாத நடவடிக்கைகளால் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு - சட்டத்தரணிகள் சங்கம்
-MFM.Fazeer-
நாட்டில் மத நம்பிக்கை கொண்டவர்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பிரசாரங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், தேசிய நல்லிணக்கத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அச் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா தெரிவித்தார்.
இதனால் இதுபோன்ற இனவாத மற்றும் வர்க்க பேதங்களை தோற்றுவிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபரை கோருவதாக அவர் தெரிவித்தார்.
சட்டத்தின் மீதான உறுதிப்படுத்தலைக் கொண்ட எந்தவொரு ஜனநாயக தேசத்திலும் இத்தகைய மதவாத, இனவாத நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அது பாரிய விளைவுகளை எற்படுத்தவல்லது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா மேலும் தெரிவித்தார்.
ஒரு பட்டவர்த்தமான இனவாதியைக் கைதுசெய்ய தேசிய சர்வதேசிய அழுத்தங்கள் வந்தும் - அவனைக் கைதுசெய்ய ஜனாதிபதி இன்னும் தயங்கிக் கொன்டிருக்கிறார் என்றால் - ஜனாதி தன்னை தான் ஒரு இனவாதிதான் என்பதை நிட்சயப்படுத்துகிறாரா ???????????????
ReplyDeleteInform to the president and wijeyadasa Rajapaksha
ReplyDelete