இரத்தினபுரி மாவட்டத்திற்கான, அமைப்பாளராக றிசாட்
அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காக அமைப்பாளராக நியமிக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுத்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களின் சகல ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் கண்டறிதல் இந்த புதிய அமைப்பாளர்களின் கடமையாகும்.
Mr. Rishad do your best for all those people who have been affected by this tragedy. You have been assigned to the worst affected district.
ReplyDeleteஇது றிஸாத்திட்கு சிங்கள மக்களின் நன்மதிப்பை பெற்று இனவாதிகளின் போலி பிரச்சாரங்களை முறியடிப்பதட்கான சந்தர்ப்பன்தான்... ஆனால் இதன்மூலம் றிஸாத்தின் முஸ்லீம் முஸ்லிம்களுக்கான போராடத்தை தனிப்பதட்கான சூழ்ச்சியாக இருந்தாலும் றிசாத் அவ்வாறு தணிந்து விடக்கூடாது.
ReplyDeleteRishad is very happy, so no need to arrest Janasara. Well done Yahapalanaya.
ReplyDelete