உமா ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக, மூவின மக்களும் இணைந்து போராட்டம் (படங்கள்)
பண்டாரவளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி இன்று ஆயிரகணக்கான மக்கள் நகரின் மத்தியில் பதாதைகளை ஏந்தியும், கறுப்பு கொடிகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தினால் தமது வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிப்புகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியும் மற்றும் சேதத்திற்கான நேர்த்தியான கொடுப்பனவுகள் இன்மை காரணமாகவும் அவர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு, பொது போக்குவரத்து சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உமா ஒயா திட்டத்தினால் நீர் ஊற்றுக்கள் வற்றியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அத்தோடு 4000 கிணறுகள் வரை வற்றிபோயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உமா ஓயா திட்டமானது கடந்த 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment