ரணிலுடன் இணைந்திருந்த ஞானசாரா, பின்பு மஹிந்தவின் ஆதரவாளரானார்...!
பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் மாத்திரமல்ல, அவரைப்போல் முஸ்லிம், தமிழ் அமைச்சர்களும் எம்பிக்களும் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை பேசுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் மதியம் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
முஸ்லிம்கள் தமது கடைகள், பள்ளிவாசல்களுக்கு எதிராக 25 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். இந்துக்கள் கிழக்கில் 61 கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் தங்கள் ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். பௌத்தர்கள் தங்கள் தொல்பொருள் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் முறையிடுகிறார்கள். இச்சம்பவங்களின் பின்னணியுடன் சம்பந்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும். பொலிஸார் இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இலங்கையில் மாத்திரமல்ல உலகெங்கும் இவ்வாறான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. ஜேர்மனியில் 97 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இதேபோன்று இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்காவில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக்கில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கில் கொலை செய்யப்படுகிறார்கள். ஷியா – சுன்னி கலவரத்தில் அநேகர் இறக்கிறார்கள்.
ஞானசாரதேரர் ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து 2004 ஆம் ஆண்டு விலகிச் சென்றார். நாம் பிக்குகளுடன் செயற்படும் போது அவர்களுக்கு கௌரவமளிக்கும் வகையில் செயற்பட்டோம். ஞானசாரதேரர் எம்முடன் இருக்கும் போது எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. 2004 இல் எம்மிடமிருந்து பிரிந்து சென்ற ஞானசாரதேரர் 2005 இல் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டார். பின்பு 2010 இல் சரத்பொன்சேகாவுடன் செயற்பட்டார். அதன் பின்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளரானார். திஸ்ஸ விதாரண ஞானசாரதேரர் தொடர்பில் என்னை குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இணைந்த எதிர்க்கட்சியினருக்கும் சட்ட ஆலோசனை வழங்கும் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரே ஞானசாரதேரரின் சட்டத்தரணியாக செயற்படுகிறார்.
நம்பிட்டோடோம்ம்ம்!!!??? ஆக முஸ்லிம்களூக்கும் அநீதி செய்வதில் நாம் பின் வாங்கமாட்டோம் அதானே
ReplyDelete