Header Ads



இலங்கையில் திங்கட்கிழமை பெருநாள், அரபு + ஐரேப்பிய நாடுகளில் நாளை

இலங்கையில் திங்கட்கிழமை (26) பெருநாள் கொண்டாடப்படுமென அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது.

அரபு, ஐரேப்பிய நாடுகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது.

அத்துடன் இந்தோனேசியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பிறை தென்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் முதலில் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் பிறை காணப்பட்டுள்ளது.

ஜப்னா முஸ்லிம் இணையத்தின் சகல வாசகர்களுக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்...!

1 comment:

  1. நமது நாட்டிலே பிறையை தீர்மானிப்பதென்பது ஒரு சபாகேடான விஷயமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. மூன்றாம் சிறுபான்மையாக இருக்கும் நாம், எல்லோரும், ஒன்றாக ஒரேநாளில் பெருநாளைக் கொண்டாட முடியாதென்றால், அவ்வளவுக்கு சீரழிந்த சமுதாயமாக நாம் ஆகிவிட்டோமா? நாட்டில் பாதி இடங்களில் பெருநாள், மீதி இடங்களில் அடுத்த நாள்: பிறையை பார்த்து நோன்பு பிடியுங்கள், விடுங்கள் என்ற வசனத்தை வைத்துக்கொடு, இப்படியெல்லாம் நமது சமூகத்தை துண்டாட வேண்டுமா?

    துபாய்க்கும் சிலோனிக்கும் நேர வித்தியாசம் வெறும் ஒண்டரை மணித்தியாலம்டான். எங்களுக்கு பின்புதான் அவர்கள் பிறையை பார்க்க வேண்டும். நாம் தவறவிட்டதை அவர்கள் ஒண்டரை மணி நேரம் கழித்து பார்த்திருக்கிறார்கள். ஆனால், டுபாயில் கண்ட பிறையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அடுத்தநாள் பிறை கண்டதாக எடுத்தால், எப்படி இருபாத்தி நான்கு மணித்தியாலங்கள் வித்தியாசம் வரும்? அடுத்த நாள் பிறையை பார்க்கும் போது, அது இரண்டாம் பிறையாக இருந்தால் என்ன செய்வது?

    பெருநாள் அன்று நோன்பு பிடிப்பது ஹாரம். எமது சமூகம் ஒட்டு மொத்தமாக இந்த ஹாரத்தை செய்வதனால்தான், பலவிதமான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, நாதி அற்ற சமூகமாகி விட்டோமோ?

    ReplyDelete

Powered by Blogger.