கம்மல்துறை 'அல்-பலாஹ்' நூற்றாண்டைக் கொண்டாடத் தயாராகிறது!
-எம்.ஜே.எம். தாஜுதீன்-
"நூற்றாண்டை அண்மிக்கும் அல்-பலாஹ்" என்ற தலைப்பிலான கருத்தங்கு ஒன்று நீர்கொழும்பு கம்மல்துறை அல்-பலாஹ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் கடந்த 03.06 2017 சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பாடசாலை ஆசிரியர் எம்.ஜே. அஜ்மல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் துறைசார்ந்தோர் கருத்துரைகள் வழங்கினர்.
கல்வித்துறைசார் பிரமுகர்கள்,கல்வி ஆர்வலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என நூற்றுக்கணக்கானோர் இக்கலந்துறையாடலிலல் கலந்து கொண்டனர்.
"ஐம்இய்யதுன் நிதா" அமைப்பின் ஏற்பாட்டில் 'இப்தார்' நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.
நூற்றாண்டு விழா தொடர்பில் குழுக்கள் அமைத்தல், கடந்கால சாதனைகளைத் தொகுத்தல்,நூற்றாண்டு மலர் வெளியிடுதல் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Post a Comment