பேஸ்புக்கினால் இணைந்த இளைஞர்கள், செய்த நல்ல காரியம்..!
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததால் பெரும் பாதிப்புக்குள்ளான களுத்துறை மாவட்ட புளத்சிங்கள பிரதேசத்தில் வாழும் இன மத பேதங்களுக்கப்பாற்பட்ட எமது உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் உரியவாறு அவர்கள் கைகளிலேயே சேர்ப்பதற்கான வாய்ப்பு நேற்றைய தினம் எமக்கு கிட்டியதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
முதலில் இவ்வாறானதொரு நிவாரணப்பணிக்கான எண்ணக்கருவுக்கு மதிப்பளித்து மறுப்புத்தெரிவிக்காது உடனடியாக ஒன்று சேர்ந்த Rimaz Ahamed, Zafar Ahmed மற்றும் அவர்களை தொடர்ந்து, இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க தாமாகவே முன்வந்து ஒன்றிணைந்த Parthipan Subramaniyam Krishy Krish Abdullah Vtm Imrath Jameel A Majeed Pradip Cmb Meganath Vijayasundaram Pragash உள்ளடங்கிய எமது குழு பல்வேறு இன்னல்கள் மற்றும் அத்தியாவசிய அலுவல்களுக்கு மத்தியிலும், முகப்புத்தகத்திலும்,பொது வெளியிலும் பகிரங்கமாக வெளியிடப்பட்ட எதிரான விமர்சனங்களையும் பொருட்படுத்தாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்றவகையில் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில ஆரம்பம் முதல் இறுதிகட்ட நிவாரணப்பணி வரை தமது முழுமையான பங்களிப்பை வழங்கிய எமது நண்பர்களுக்கும்,
மேலும் இந்த நிவாரணப்பணிக்கு வலுவூட்டும் வகையில் எம்மீது நம்பிக்கை வைத்து நிவாரணப்பொருட்களுக்கான இன்றியமையாத உதவிகளை வழங்கிய உள் நாட்டு மற்றும், வெளி நாட்டு நல் உள்ளங்களுக்கும், முகப்புத்தக நண்பர்களுக்கும், எமது பதிவுகளை உடனுக்குடன் பகிர்ந்த மலையக குருவிக்கும், எமது முகநூல் சொந்தங்களுக்கும்,
நிவாரணப்பொருட்களை பாதிக்கப்பட்டவர்களின் கைகளுக்கே கொண்டு சேர்ப்பதற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடினமான பாதைகளிலும் மறுப்புத்தெரிவிக்காது வாகனத்தை செலுத்தி எமக்கு பணியை இலகுவாக்கிய வாகன சாரதி கணேஷ் அவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களை சரியாக இணங்கான உதவிய அதிபர் திரு. ஆனந்த குமார், திரு. ரவி, அவர்களுக்கும், விசேடமாக நோன்பு நோற்று கடினமான சூழ்நிலையிலும் நிவாரணப்பணிகளை செம்மைப்படுத்திய எமது குழுவின் முஸ்லிம் நண்பர்களுக்கும்
இத்தனை சிரமங்களையும் கடந்து நிவாரணப்பணிகளை முழுமையடையச்செய்து வரும் வழியிலேயே அடுத்தாக இரத்தினபுரி மாவட்டத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்குவதது தொடர்பான ஏற்பாடுகளை பற்றி கலந்தாலோசித்த எமது குழுவுக்கும்,
மேலும் எம்மை போன்று நிவாரணப்பணிகளில் ஈடுபடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
"எல்லாப்புகழும் இறைவனுக்கே"
Post a Comment