முஸ்லிம்கள் மீது தாக்குதலினால், விழிப்பு நிலையில் புலனாய்வுப் பிரிவுகள்
வெறுப்புணர்வைத் தூண்டுவதன் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பாக, அரச புலனாய்வுப் பிரிவுகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களை இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்புணர்வு குற்றங்களின் பின்னால் உள்ள அரசியல் சக்தி தொடர்பாகவே புலனாய்வுப் பிரிவுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய வெறுப்புணர்வுக் குற்றங்களை மேலும் தொடராமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, புலனாய்வு அமைப்புகளுக்கான கூட்டம் ஒன்று கடந்தவாரம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், இத்தகைய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் இணையம் மற்றும் சில ஊடக நிறுவனங்கள், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் குழப்பும் வகையிலான செய்திகளைப் பரப்பும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தார்.
Post a Comment