பெண் மீது பாலியல் வல்லுறவுக்காக பாய்ந்த, பொலிஸ் அதிகாரி பொல்லால் தாக்கப்பட்டு படுகாயம்
சீருடையில் சென்ற பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர், பெண்ணொருவரை பலவந்தப்படுத்தி, பாலியல் வன்புணர்வுக்கு முயன்றபோது, அப்பெண் பொல்லால் தாக்கியதில், சார்ஜென்ட் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம், அனுராதபுரம் கெப்பத்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடும் காயங்களுக்கு உள்ளான அந்த சார்ஜென்ட், பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில், அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
குறித்த பெண், பொலிஸ் சான்றிதழை பெறுவதற்காக, கெப்பத்திகொல்லாவ பொலிஸ் தலைமையக, பொதுமக்கள் தொடர்புபாடல் பிரிவுக்குச் சென்று, மேற்படி சார்ஜென்டை சந்தித்துள்ளார்.
அதற்கு பின்னர், அந்த பெண்ணின் வீட்டுக்கு, நேற்று (21) சென்றிருந்த சார்ஜென்ட், அப்பெண்ணை பலவந்தப்படுத்தி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதற்கு முயன்றுள்ளார். எனினும், சார்ஜென்ட்டிடமிருந்து தப்புவதற்காக, அப்பெண் பொல்லால் சார்ஜென்டை தாக்கியுள்ளார். அதன்பின்னர், கெப்பத்திகொல்லாவ பொலிஸ் தலைமையகத்துக்கு தொலைபேசியின் ஊடாக அறிவித்துள்ளார்.
அதன்பின்னர், அந்த பெண்ணின் வீட்டுக்கு, பொலிஸ் குழுவொன்று சென்றபோது, சார்ஜென்ட் இரத்தம் தோய்ந்த நிலையில், நாற்காலியொன்றில் அமர்ந்திருந்துள்ளார். அதன்பின்னர், அந்த பொலிஸ் குழு அவரை கைதுசெய்தது.
அந்தப் பெண்ணை தான், வன்புணர்வுக்கு உட்படுத்துவதற்கு முயன்றதாக சார்ஜென்ட் ஒத்துகொண்டுள்ளார். இதனையடுத்து, அவர் சேவையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.
சீருடையில் இருந்த சார்ஜென்ட், கடமைக்கு செல்வதாக பொலிஸ் புத்தகத்தில் பதிவுசெய்துவிட்டே, பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளமை, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
வேலியே பயிரை மேய்கிறது
ReplyDeleteகாவலி கைதூ ஆனால் அகதியாக நம்பி வந்த பெண்னை மானபங்கம் செய்த காவலி இன்னும் விசாரனை கூட இல்லை ஏன்,முஸ்லீம் என்ற படியாலா,,!!??
ReplyDeleteDr ABDUL Wahab this is not the Myanmar girl case.
ReplyDeleteNick name la dr endu pottu enda news ethu endru kooda theriyama comment pandringa.
If you are really a doctor I feel Feel sorry for your patients.
Voicesrilanka. Dr. Abdul Wahab sariyahattan solliyirukkar. Awar inda newsai tawaraha puriyawillai ena nialaikren. U misunderstand him bro....
Delete