Header Ads



இன, முறுகலை ஏற்படுத்துவோர் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் - பொலிஸ் திணைக்களம்

இனம், மதங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த நபர் அல்லது குழுவினர் யாராக இருக்கின்றபோதிலும், அவர்கள் தராதரம் பார்க்கப்படாது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தங்களது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறான குழப்பகரமான அல்லது பிரச்சினைக்குரிய வகையிலான சம்பவங்கள் இடம்பெறும் நிலையில், அது தொடர்பான முழுப் பொறுப்பையும் குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறான நிலைமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உதவி பொலிஸ் அதிகாரிகள், பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மிக பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் என, பொலிஸ் மா அதிபரினால் அறிவுறுத்தப்பட்ட சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான பிரச்சினைக்குரிய விடயங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஒரு சிறு குழுவினர், சமூக வலைத்தளங்களின் ஊடாக, பொய்யான பிரச்சாரங்களில் மேற்கொண்டு, இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி, வேற்றுமையை ஏற்படுத்துவதற்கும் மதங்களை இழிவுபடுத்தும் வகையிலான பல்வேறு கருத்துகளையும் மேற்கொள்வது அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவ்வாறான கருத்துகளை வெளியிடும் நபர் அல்லது குழுவினருக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. Nadanthaaal sari...!!!

    ReplyDelete
  2. this media report for minorities only..!!!! history has good examples...!!!!

    ReplyDelete
  3. வரைவு மட்டுமே
    செயற்படுத்துவது கடினம்
    மனிதர்களை இறைவன் ஸ்தானத்திற்கு வைத்து வணங்கும் வரை

    ReplyDelete
  4. Enakkum unkalukkum ithu amul seiyappadum. Kavikalukku eappothum vithivilakku.Purinthal sari makkaley.

    ReplyDelete
  5. HOPE for the Best situation of this sweet land.

    ReplyDelete
  6. பொய்யை சொல்லுவதினூடாக ஒரு பிரமையை மக்களுக்குத் தோற்றுவிக்கும் ஒரு கூற்று மட்டுமே.

    ReplyDelete

Powered by Blogger.