இனவாத அமைச்சர்களை வைத்துக்கொண்டு, மக்களுக்கு சட்டம்போட்டு ஒன்றும் நடக்கப் போவதில்லை - நாமல்
இனவாதத்தை கக்கும் அமைச்சர்களை அரசாங்கத்தில் வைத்துக்கொண்டு பொது மக்களுக்கு சட்டம் போடுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதை தெரிவித்துள்ளார்.
நாம் இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டுவதாக கூறியவர்கள் இப்போது அவர்களின் நிர்வாணம் வெளிப்பட்டுள்ளதால் செய்வது அறியாது முழித்துக்கொண்டு உள்ளனர்.
நாட்டில் எல்லா துறைகளிலும் பிரச்சினைகள் தலை துக்கியுள்ளன. தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாமல் அரசாங்கம் அதனை வருடக்கணக்கில் பிற்போட்டு வருகிறது.
இனவாதத்தை கக்கும் அமைச்சர்களை அரசாங்கத்தில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் சட்டம் போடுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவு டெங்குநோய் அதிகரித்துள்ளது. வைத்தியசாலைகளில் மக்கள் கட்டில்கள் இல்லாமல் நிலத்தில் படுத்து உறங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கியை நிர்ணயிக்க முடியாது, சுகாதார அமைச்சை நிருவாக செய்ய தெரியாத, விருது பெற்ற நிதி அமைச்சரும் சுகாதார அமைச்சரும் இந்த நாட்டில் மட்டுமே இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
Post a Comment