நான் வருந்துகின்றேன் - ரணில்
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் சம்பந்தமாக அறிக்கைகள் எனக்கு ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை கிடைக்கின்றது. இந்த இக்கட்டான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்க்க முடியாமையையிட்டு நான் வருந்துகின்றேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் நேற்று செய்த பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் அப்பதிலில் தெரிவித்துள்ளதாவது,
சுகயீனமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த எனக்கு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளம் ஆகிய அனர்த்தங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதன்போது அனர்த்தத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் உதவி புரிந்த முப்படையினர், அரச ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.
அத்துடன் நாட்டின் அனர்த்தம் தொடர்பிலான அத்தியாவசிய அறிக்கைகள் எனக்கு ஆறு மணித்தியாலத்திற்கு ஒருமுறை கிடைக்கிறது. இது தொடர்பில் நான் அவதானம் செலுத்தி வருகின்றேன் என பதிவு செய்துள்ளார்.
This dump will kick out from next election...
ReplyDelete