வடக்கு - கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமில்லை
வடக்கு மற்றும் கிழக்கில் ஏதோ ஒருவகையிலான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களை பார்க்கிலும், தற்போது அந்த மாற்றங்களை உணர முடிவதாகவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "நாளை நிச்சயமாக இன்னும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இருந்தும் எல்லாம் மாறிவிட்டது என்று கூறமுடியாது.
இந்நிலையில், வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமில்லை. அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே ஏற்றுக்கொண்டுள்ளனர். யதார்த்தமும் அதுதான்.
இலங்கை மதம் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும், இலங்கை அரசியல் அமைப்பு சமஷ்டி அரசியலமைப்பாக வரவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
எனினும், இந்த விடயங்கள் நடக்காது. அதேவே உண்மையும் கூட. அந்த யதார்த்தத்தின் பங்காளியாகவே கூட்டமைப்பு இருந்துகொண்டிருக்கின்றது.
இதனை வைத்துக்கொண்டு கூட்டமைப்பையோ, இரா.சம்பந்தனையோ குறை கூற முடியாது. இந்த விடயம் தொடர்பில் சம்பந்தனும் முழு முயற்சியுடனேயே செயற்பட்டுகொண்டிருக்கின்றார்.
யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் நிலை பலவீனமாக இருக்கின்றது. எனவே, இருப்பதை வாங்கிக்கொண்டு ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது பழையநியூஸ்.
ReplyDeleteஇதை நானே பல பதிவுகளில் குறிப்பிட்டேன்.வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்பதை விட அது எந்த முயற்சியும் செய்யாமல் ஆதிகார அலகை பெற எத்தனிப்போரின் போரசையை நிறைவேற்றுவதாகவே அமையும்.
தற்போதைய முயற்சிகள் இரண்டு அவற்றில் ஒன்று நிறைவேறும்.
1.அரசமைப்பில் மாகண எல்லை நிர்ணய நிரலில்.வடக்குடன் திருமலை.மட்டு மவட்டங்களை உள்ளடக்குவது.
2.அவ்வாறு இணைக்க முடியாவிட்டால் புதியகிழக்கை உருவாக்குவது.(மட்டு.திருமலை கொண்ட புதிய மாகாணம் உருவாக்குவது.)
அம்பாறை தனிமாகாணமாக காணப்படும்.(சிங்கள பிரதேசங்கள் நீக்கபடமாட்டாது)
இவை மங்கள முனுசிங்க.,சந்திரிக்கா.மகிந்தவின் தெரிவுகுழுக்கலால் ஏற்கனவே முன்மொழியப்பட்டது.).10மாகாங்களின் சாத்தியபாடு அதிகம்மாக உள்ளது.
இதுதான் எதார்தம். இண்ணும் நாடு வேணும் காடு வேணும்னு கூவிட்டு இருக்காம ஆகவேண்டியத பார்ப்பது நல்லது. வட தமிழர்கள்
ReplyDelete2தலைமுறை பின்னுள்ளார்கள் என்பதை மறந்து விடவேண்டாம்.
வடை போச்சே
ReplyDeleteஇதே விடயம்தான் அன்றும் சமாதான பேச்சுவார்த்தைகளில் அன்டன் பாலசிங்கத்திடம் கூறப்பட்டது. 15 வருடங்களின் பின் பழைய பிரதியிலேயே கையொப்பம் இடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அன்று ஏற்றுக்கொண்டிருந்தால் வடக்கும் கிழக்கும் இணைந்த நிலையில் கையளிக்கப்பட்டிருக்கும்.
ReplyDeleteஎதிலும் புலிகளுக்கு தூரநோக்கு இருக்கவில்லை. உ:ம்
1. ராஜிவ் காந்தி கொலை
2. வடக்கிலிருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம்
3. தமிழ் போராட்டக்குழுக்களில் இருந்த முஸ்லிம் போராளிகளை கொன்றமை
4 முஸ்லிம்களின் படுகொலைகள்.
5. தமக்கு ஆயுத உதவிசெய்ததுடன் இந்தியப்படையையும் வெளியேற்றிய பிரேமதாசவை கொலைசெய்தமை.
6 மகிந்தவை சனாதிபதியாக ஆக்குவதற்காக தமிழ்மக்களை வாக்களிக்கவிடாது தடுத்தமை
அண்டன் பாலசிங்கத்திடம் எந்த தீர்வும் கையளிக்கப்படவில்லையே.சுனாமி மீள்நிர்மானத்திற்காக இடைக்கால ஆட்சியை புலிகளுக்கு தருவதாக கூறி பேச்சு நடத்தி சிங்கள இனவாதிகளின் எதிப்பால் கைவிடப்பட்டது.
Deleteகனவு ஏதும் கண்டீரா
சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பாசிச புலிகளை அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தியவர் அன்டன் பாலசிங்கம். இது தொடர்பாக அக்காலப்பகுதியில் வெளிவந்த பத்திரிகை செய்திகளையும் அவர் இறந்த பின்னர் வந்த பத்திகளிலும் எழுதப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எனது கருத்தை தொகுத்திருந்தேன்.
Deleteமாறாக நான் கற்பனையில் எழுதும் கதாசிரியரோ கவிஞ்சரோ அல்ல. ஆனால் குமரா நீர் அமரர் அன்டனுக்கு குடைபிடித்துச்சென்றாயா? அல்லது... கட்டபொம்மன் வாசகங்கள் ஞாபகம் வருகிறது.
கற்றறிந்த பண்டிதர்போல் விளக்கம் சொல்லமுனைவதும் பின் இயலாமையால் பொய்களைப்புனைவதும் உமது வழக்கமாயிட்டு.
இந்நிலையில் என்னையும் மற்றும் உமக்கு மறுப்புரைப்பவர்களையும் இனவாதி என்கிறீர். ஜப்னா முஸ்லிம் விஷேடமாக முஸ்லிம்களின் விவகாரங்களில் கூடிய அக்கறைகொள்ளும் ஓர் தளமாகும். அதற்குள் குமரன், அந்தோணி, சந்திரபோல் ஆகிய புலிக் கொலைஞர்கள் ஊடுருவி முஸ்லிம்களைப்பற்றி தரக்குறைவாகவும் பொய்களையும் எழுதும் போது எங்கள் பக்க விளக்கங்களை ஆதாரபூர்வமாக முன்வைக்கும் போது எங்களை இனவாதி என்கிறீர்.
நீங்கள் ஆயுதமுனையில் கூட குட்டியபோது தொடர்ந்து குனிந்துகொண்டு இருந்தவர்கள் அல்ல முஸ்லிம்கள் என்பதை அன்றைய எமது இளைஞர்கள் நிறுவியதையும் நீர் அடிக்கடி குற்றம்சாட்டுவதுண்டு.
ஆனால் நீர் கருப்பு ஆடு போன்று நுழைந்துகொண்டு இத்தளத்தினை துஷ்பிரயோகம் செய்கிறீர். இதனால் உமக்கு தக்க பதிலடிகள் ஆதாரபூர்வமாக மட்டும் வழங்கப்படுகிறது என்பதை நீரும் மற்றய இருவரும் கருத்திற்கொள்க.
Lafir நீங்கள் தமிழரைவம்புக்கு இழுப்பாதாலேயே இங்குதமிழர்கள் பதிவிடுகின்றனர்.அத்துடன் நீண்ட உம் பதிவுகளில் உண்மைகள் ஏதும் இருப்பதில் எல்லாம் கற்பனையே.காள்புணர்சியின் வெளிப்பாடே..
DeleteMr Mano / you know the reality.
ReplyDeleteNorth/East amalgamation never will happen.
Namo Namo Matha
Jaffna Muslim முஸ்லிம்கள் விவகாரங்களில் கூடிய அக்கறை கொள்ளும் தளமாக இருப்பது நல்ல விடயம். ஆனால் அதைவிட ஏனைய மதங்களை/ இனங்களை இழிவு படுத்தி எந்த பத்திரிகை தர்மத்தையும் கடைபிடிக்காமல் எழுதுவதை முக்கியமாக செய்கிறது . உண்மையில் முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சனைகளை மாத்திரம் பிரசுரித்து வந்தால் , நாம் எல்லாம் தேவை இல்லாமல் இங்கு வந்து பின்னூட்டங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
ReplyDeleteAbsolutely right😊
Delete