Header Ads



இஸ்ரேலின் ஏவுதலில், கத்தார் மீது பொருளாதாரத் தடை..?

AM. ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )

கத்தாருடன் இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்வதாக வழைகுடா முஸ்லிம் நாடுகளான, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து மற்றும் யெமன் போன்ற நாடுகள் இன்று ஊடகங்களில் பகிரங்கமாக செய்தி வெளியீட்டுள்ளது. அதேபோல் தரை வழிப்பாதை மற்றும் ஆகாய வழிப்பாதை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்று காலை சவூதியில் இருந்து கட்டாருடைய விமானம் திருப்பி அனுப்பட்டுள்ளது.

இன்னொருபுறம் சந்தோஷம் தாங்க முடியாமல் இஸ்ரேலில் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இஸ்ரேலின் முதல் கணவு யூதர்களுக்கென்று தனியான கேந்திர முக்கியத்துவமான நிலையமாகவும் ஆயுத உற்பத்தியை மேற் கொள்ளும் இடமாகவும் இஸ்ரேலை தயார் படுத்தல் அடுத்ததாக வழைகுடா முஸ்லிம் நாடுகளுக்கிடையில் பிண்க்குகளை ஏற்படுத்தி வழைகுடா நாடுகளில் தான் ஆயுத உற்பத்தியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னணியில் திகழ்தல் என்ற நோக்கத்துடன் அமெரிக்காவுடன் சேர்ந்து பக்காவாக சூழ்சி செய்து வருகிறது .

இஸ்ரேன் கணவுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருப்பது இஃவானுல் முஸ்லிம்கள் . இவர்கள் எகிப்தை கைப்பற்றினால் எமது கனவு சுக்கு நூறாகி விடும் என்பதுவே இஸ்ரேல் கவலை அதேபோல் மஸ்ஜிதுல் அக்ஸா முற்றாக ஹமாஸின் பட்டுப்பாட்டின் கீழ் போகிவிடும் என்பது இஸ்ரேலின் மற்றொரு கவலை எனவே இஃவான்களை எகிப்தின் ஆட்சியில் ஏறக் கூடாது என்பதற்காக அப்துல் பத்தாஹ் சீசியை ஒரு எச்சுக்கல் நாயாக வளர்த்து வருகின்றது. இதுவே இஸ்ரேலின் நிலைப்பாடு.

சவூதி அரேபியாவின் நிலைப்பாடாக எகிப்தில் இஃவானியர்கள் ஆட்சியில் ஏறினானல் தனது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிடும் எகிப்தின் உத்தியோக பூர்வ ஜனாதிபதி முஹம்மது முர்ஸி அறிமுகமாக்கிய சுயஸ் கால்வாய் திட்டம் நிறைவேறினால் தனது பொருளாதாரம் சீர் கெட்டுவிடும் என்பதில் சவூதி அரசு தனது சுய நலத்திற்காக முஸ்லிம் சமூகத்தை யூத நரிகளுக்கு காட்டிக் கொடுத்து வக்காளத்து வாங்குகின்றது .

லபனான் ஒரு ஷீயா நாடு . இவர்களின் நிலைப்பாடாக எப்படியோ இஃவான்கள் அரபு வசந்தத்திற்கு வித்திட்டவர்கள் . அதேபோல் சிரியா மக்கள் எழுச்சியில் காரண கருத்தாவாக இருந்தவர்கள் எனவே எமது ஷீஆ அடக்குமுறை அரசை சிரியாவில் அழிப்பதில் முக்கிய கருத்தாவாக இருக்கின்றார்கள் . எனவே இது ஒரு தருணம்.

அமெரிக்காவிற்கு இஃவான்கள் வந்தால் தமது செல்லப் பிள்ளை இஸ்ரேலின் இருப்பு போய்விடும் . என்ற பயத்தாலையே தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற பெயரில் இஃவான்களுக் அடைக்கலம் கொடுத்த கத்தார் மீது பொருளாதார தடை விதிக்க முஸ்லிம் நாடுகளை ஏவியுள்ளது. இப்படி ஒவ்வொரு நாடுகளும் தனது சுய நலத்திற்காக எமது முஸ்லிம் உம்மத்தை அழித்து வருகின்றது.

இதுவா இஸ்லாமிய நாடு ?????
சிந்திப்போம் செயற்படுவோம்

6 comments:

  1. pls. do not put fuel to the fire. GCC Knows their problem, Iran involvement, Ikhwaneen issue, Israel etc. Without judging the issue quickly let us pray for their unity and for our safety in the holy month.

    ReplyDelete
  2. சத்தியம் வெல்லும் அசத்தியம் அழிந்து விடும்.வெற்றிய நாளை சரித்திரம் சொல்லும்.

    ReplyDelete
  3. அப்பா வந்துட்டாங்கய்யா பெரிய போராளிகள்!கட்டாரோ சவூதியோ துருக்கியோ இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நாடுகளல்ல!!இந்நாடுகளின் அரசியல் பிரச்சினைகளை இலங்கை மக்கள் மீது திணிக்க பல போராளிகள் களத்தில் அதை எதிர்த்து சவூதி சார்பான போராளிகள் ஒரு பக்கம்!!!இலங்கைட பிரச்சினைக்கு வாங்கடா மேதாவிகளா!!!

    ReplyDelete
  4. கட்டாரிலுள்ள ஹமாசின் முக்கிய போராளிகள் hamas khaled meshaal வெளியேற்றவேனும் அது தான் இஸ்ரயேலின் முதல் திட்டம் அதுக்கு தான் இந்த சியோனிசனின் முதல் சூழ்ச்சி திட்டம் செய்றங்க .

    ReplyDelete
  5. இது இன்று நேற்று அல்ல பல வருடங்களாக மேற்கத்தீய நாடுகள் திட்டமிட்ட சதி இந்த தூர நோக்கு சதியின் மிகப் பெரிய சதித்திட்டம் எகிப்தின் கொடுங்கோல் ஆட்சியாளனும் அமெரிக்காவின் கை பொம்மையுமான ஹொஸ்னி முபாறக்கை தோல்வியடையச்செய்து ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட் அரசாங்கத்தின் தலைவரான முஹம்மது முர்ஸியின் ஆட்சி கவுக்கப்பட்டது இந்த ஆட்சி கவுப்புக்காக திட்டம் தீட்டிய இஸ்ரவேலுக்கு உதவியாக இருந்தவர்களும் இந்த நயவஞ்சக நாடுகள் தான் அன்று முதலே இவர்களின் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்ட சதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் நழுவிய நாடுதான் கட்டார்,கடந்த வருடம் இஸ்ரவேல் பாராளுமன்றத்தில் இஸ்ரவேலின் எதிரி நாடு கட்டார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் அது சம்மந்தமாக இந்த கூட்டு நாடுகளான அரபுகள் யாரும் வாய் திறக்கவில்லை.சவுதி அரபிய அரசு இவ்வாறான முடிவுகளை அதாவது இஸ்லாமிய சரியாவுக்கு அப்பால் வரக்கூடியதான முஸ்லிம்கள் பாதிக்கப்படும் தீர்மானங்களை எடுக்கும் போது அங்குள்ள உலமாக்களும் வாய் மூடி மௌனியாகவே இருக்கின்றார்கள்.அதற்கும் பல காரணங்கள் இருக்கிறது.எகிப்தை பிறப்பிடமாகவும் கட்டாரில் வாழ்ந்து வருபவருமான அஷ்ஷேஹ் யூசூப் கர்ளாவி முப்தி அவர்களுக்கும் மார்க்க தீர்ப்புகள் விடயங்களில் முறுகல் நிலை கடந்த காலங்களில் நிலவியது.அதில் மிகவும் முக்கியமானது முஹம்மது முர்ஸியின் ஆட்சிக் கவிழ்ப்பு .இதனை கடுமையாக கண்டித்தவர் யூசூப் கர்ளால்வி,இஹ்வானுல் முஸ்லிமீன்களை சார்ந்த முர்ஸிக்கு ஆதரவு கொடுப்பருடன் எதிலும் ஒத்துப்போக முடியாத நிலைதான் சவுதி முப்திகளுக்கு இருந்தது,காரணம் சவுதி அரபியா இஹ்வானுல் முஸ்லிம்களை ஒரு பயங்கரவாத இயக்கமாகவே அன்றும் இன்றும் பார்க்கிறது,ஆகவே கட்டாருக்கான இந்த நடமுறைப்படுத்தலை மிக ஆழமாக திட்டம் தீட்டியே இந்த அரபுலம் செய்துள்ளது.இதன் மூலம் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் சகல அரபு நாடுகளையும் பாதிக்கும் என்பதை காலங்கடந்துதான் இந்த சவுதியும்,அதன் கூட்டாளிகளும் புரிந்து கொள்வார்கள்,கடந்த காலங்களில் ஈராக்கையும் சதாமையும் தரை மட்டமாக்க இவர்கள் அமெக்காவுக்கு வழிவகுத்துக் கொடுத்ததை இப்போது தவறு என்று உணர்ந்துள்ள செய்திகளை இந்த அரபு நாடுகள் சில கருத்து வெளியிட்டதும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது,அவ்வாறே இந்த கட்டார் விடத்திலும் கைசேதப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை ,

    ReplyDelete
  6. இது இன்று நேற்று அல்ல பல வருடங்களாக மேற்கத்தீய நாடுகள் திட்டமிட்ட சதி இந்த தூர நோக்கு சதியின் மிகப் பெரிய சதித்திட்டம் எகிப்தின் கொடுங்கோல் ஆட்சியாளனும் அமெரிக்காவின் கை பொம்மையுமான ஹொஸ்னி முபாறக்கை தோல்வியடையச்செய்து ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட் அரசாங்கத்தின் தலைவரான முஹம்மது முர்ஸியின் ஆட்சி கவுக்கப்பட்டது இந்த ஆட்சி கவுப்புக்காக திட்டம் தீட்டிய இஸ்ரவேலுக்கு உதவியாக இருந்தவர்களும் இந்த நயவஞ்சக நாடுகள் தான் அன்று முதலே இவர்களின் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்ட சதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் நழுவிய நாடுதான் கட்டார்,கடந்த வருடம் இஸ்ரவேல் பாராளுமன்றத்தில் இஸ்ரவேலின் எதிரி நாடு கட்டார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் அது சம்மந்தமாக இந்த கூட்டு நாடுகளான அரபுகள் யாரும் வாய் திறக்கவில்லை.சவுதி அரபிய அரசு இவ்வாறான முடிவுகளை அதாவது இஸ்லாமிய சரியாவுக்கு அப்பால் வரக்கூடியதான முஸ்லிம்கள் பாதிக்கப்படும் தீர்மானங்களை எடுக்கும் போது அங்குள்ள உலமாக்களும் வாய் மூடி மௌனியாகவே இருக்கின்றார்கள்.அதற்கும் பல காரணங்கள் இருக்கிறது.எகிப்தை பிறப்பிடமாகவும் கட்டாரில் வாழ்ந்து வருபவருமான அஷ்ஷேஹ் யூசூப் கர்ளாவி முப்தி அவர்களுக்கும் மார்க்க தீர்ப்புகள் விடயங்களில் முறுகல் நிலை கடந்த காலங்களில் நிலவியது.அதில் மிகவும் முக்கியமானது முஹம்மது முர்ஸியின் ஆட்சிக் கவிழ்ப்பு .இதனை கடுமையாக கண்டித்தவர் யூசூப் கர்ளால்வி,இஹ்வானுல் முஸ்லிமீன்களை சார்ந்த முர்ஸிக்கு ஆதரவு கொடுப்பருடன் எதிலும் ஒத்துப்போக முடியாத நிலைதான் சவுதி முப்திகளுக்கு இருந்தது,காரணம் சவுதி அரபியா இஹ்வானுல் முஸ்லிம்களை ஒரு பயங்கரவாத இயக்கமாகவே அன்றும் இன்றும் பார்க்கிறது,ஆகவே கட்டாருக்கான இந்த நடமுறைப்படுத்தலை மிக ஆழமாக திட்டம் தீட்டியே இந்த அரபுலம் செய்துள்ளது.இதன் மூலம் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் சகல அரபு நாடுகளையும் பாதிக்கும் என்பதை காலங்கடந்துதான் இந்த சவுதியும்,அதன் கூட்டாளிகளும் புரிந்து கொள்வார்கள்,கடந்த காலங்களில் ஈராக்கையும் சதாமையும் தரை மட்டமாக்க இவர்கள் அமெக்காவுக்கு வழிவகுத்துக் கொடுத்ததை இப்போது தவறு என்று உணர்ந்துள்ள செய்திகளை இந்த அரபு நாடுகள் சில கருத்து வெளியிட்டதும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது,அவ்வாறே இந்த கட்டார் விடத்திலும் கைசேதப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை ,

    ReplyDelete

Powered by Blogger.